Featured Post

Sharing our 2.5 years of experience in Life Natural

தமிழில் We have been practicing Life Natural for more than two and a half years now. I have been thinking to write a post for the past ...

Monday, April 9, 2018

வேக வைத்த கோதுமை கேக்

வேக வைத்த கோதுமை கேக்
வேக வைத்த கோதுமை கேக்
வேக வைத்த கோதுமை கேக்
வேக வைத்த கோதுமை கேக்
தேவையான பொருட்கள் (2 நபருக்கு):
  1. கோதுமை மாவு – 1 குவளை (200 கிராம்)
  2. மண்டை வெல்லம் நாட்டுச் சர்க்கரை பனங்கற்கண்டு – 1 குவளை (200 கிராம்)
  3. தண்ணீர் – 1 1/2 குவளை (250 முதல் 300 மில்லி தோராயமாக)
  4. காய்ந்த ஈஸ்ட் – 1/2 தேக்கரண்டி
  5. ஏலக்காய் தூள் – 1/4 தேக்கரண்டி
  6. முந்திரிப் பருப்பு - விருப்பத்திற்கேற்ப
  7. தேங்காய் அல்லது நல்லெண்ணை – 1/4 தேக்கரண்டி
கேக் தயாரிக்க ஆகும் நேரம்:
  • மாவு தயாரிக்க – 10 நிமிடங்கள்
  • மாவை நொதிக்க வைக்க – 2 மணிநேரங்கள்
  • கேக் மாவை விரும்பும் அச்சுக்களுக்க மாற்ற -  10 நிமிடங்கள்
  • கேக்கை வேக வைக்க – 15 நிமிடங்கள்

செய்முறை:
கேக் மாவு தயாரிக்கும் செய்முறை விரிவாக, பேக்கிங் முறை கேக் செய்முறையில் தரப்பட்டுள்ளது. அதே முறையில் மாவை தயாரித்துக் கொள்ளவும்.



இட்லி பாத்திரத்தில் வேக வைத்தல்:
  1. வழக்கமாக இட்லியை வேக வைப்பதைப் போல, இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கீழ்தட்டை மட்டும் வைத்து சூடாக்கவும்.  
  2. கேக் மாவை வட்ட வடிவ பாத்திரத்தில் ஊற்றி இருந்தால், இட்லி தட்டின் மேல் ஒரு எவர்சில்வர் வளையத்தை வைத்து, பின்னர் அதன் மேல் பாத்திரத்தை வைக்கவும். 
  3. ஒருவேளை டம்ளரில் ஊற்றி இருந்தால், வளையம் தேவையில்லை. ஒவ்வொரு டம்ளரையும் இட்லி குழியில் நேரடியாகவே வைத்து விடவும். 
  4. இட்லி பாத்திரத்தை மூடி பதினைந்து நிமிடங்கள் வரை வேகவிடவும். குக்கர் முறையில் கூறியுள்ளது போல் ஒரு குச்சியை வைத்துக் குத்திப் பார்க்கவும். மாவு ஒட்டாமல் இருந்தால் அடுப்பை அணைத்து விடவும்.  
  5. கேக் பாத்திரத்தை வெளியை எடுத்து வைத்து, சற்று நேரம் ஆற விடவும். பின்னர் ஒரு தட்டில் கவிழ்க்கவும். கேக் ஒட்டாமல் தனியே விழும். எடுப்பதற்கு சிரமமாக இருந்தால் ஒரு தேக்கரண்டியைப் பயன்படுத்தவும். கேக்கை ஆற வைத்து, சிறிது நேரம் கழித்து சாப்பிடவும். கேக்கை வேக வைக்கும் முறையை எளிதாகப் புரிந்து கொள்ள, இந்த வீடியோவைக் காணவும்.

குறிப்பு:
  • வழக்கமாக கேக் தயாரிப்பதற்கு மைதா, வெள்ளை சீனி மற்றும் நொதிப்பதற்குப் பலவிதமான இரசாயனங்களைப் பயன்படுத்துவார்கள்.  இப்படி உடலுக்குத் தீமை செய்யக் கூடிய எவ்விதப் பொருளும் இல்லாமல், சாத்வீக முறையில் கேக் தயாரிப்பது எப்படி என்பதை இணையதளங்களில் தேடிப் பார்த்தேன். அப்படிப் பார்த்த வீடியோக்களில் இருந்துக் கற்றுக் கொண்டவற்றை வைத்து இந்த கேக் செய்முறையைத் தந்துள்ளேன். 
  • ஒருவேளை உங்களுக்கு, இங்குக் கூறியிருக்கும் செய்முறையை முதன்முதலில் படிக்கும் போது, கேக் தயாரிப்பது மிகவும் நேரம் ஆகும் செய்முறையாகவோ அல்லது சிக்கலான ஒன்றாகவோக் கூடத் தோன்றலாம். ஆனால் ஒருமுறை மட்டும் நீங்கள் செய்து பார்த்து விட்டால், அதன் பின்னர் மிகமிக எளிதானதாக ஒன்றாக ஆகிவிடும்.  
  • காய்ந்த ஈஸ்ட் பேக்கட் மளிகை கடைகள் அல்லது சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும்.  இதை வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டால் கேக் மற்றும் பிரட் தயார் செய்வதற்கு அவ்வப்போது பயன்படுத்திக் கொள்ளலாம். 
  • கேக் மாவின் கலவை மிகவும் கெட்டியாகவோ அல்லது தண்ணீராகவோ இருக்கக் கூடாது. எனவே தண்ணீர் ஊற்றும் போது சற்று கவனமாகக் கையாளவும். ஒருவேளை நீர் அதிகமாகி விட்டாலும், சிறிது கோதுமை மாவைக் கலந்து கொள்ளவும். அல்லது கட்டியாக இருந்தாலும் சற்று நீர் ஊற்றி, அதற்கு ஏற்ப இனிப்பின் அளவையும் சரி செய்து கொள்ளவும்.
  • கேக்கை வேக வைக்கும் முறையில் அதன் ருசி ஒரு விதமாகவும் பேக் செய்யும் முறையில் அதன் ருசி வேறொரு விதமாகவும் இருக்கும்.  இரண்டு முறைகளையும் செய்து பார்த்து விட்டு, உங்களுக்கு எந்த முறைப் பிடித்துள்ளது என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.
  • நான் சிறுதானிய மாவு வகைகளை (சோளம் மற்றும் கம்பு) மட்டும் வைத்து, இதே முறையில் கேக் செய்து பார்த்தேன். ஆனால் அது நன்றாக வரவில்லை.  இணையதளத்தில் இது குறித்துத் தேடியபோது, அதில் அனைவரும் கோதுமை மாவையும் சேர்த்தே செய்திருந்தார்கள். இயற்கை வாழ்வியல் கருத்துக்களின் படி, ஒரு நேரத்தில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட விதமான தானியத்தை (கார்போஹைட்ரேட்) மட்டுமே சாப்பிட வேண்டும் என்கின்ற காரணத்தினால், அந்த முறைகளை முயற்சிக்க விரும்பவில்லை.

No comments :

Post a Comment