Featured Post

Sharing our 2.5 years of experience in Life Natural

தமிழில் We have been practicing Life Natural for more than two and a half years now. I have been thinking to write a post for the past ...

Wednesday, October 30, 2013

சாத்வீக இட்லி

சாத்வீக இட்லி
சாத்வீக இட்லி

தேவையான பொருட்கள் - 12 முதல் 15 இட்லி தயாரிக்க

மாவு தயாரிப்பதற்கு:

  • புழுங்கல் அரிசி – 1 குவளை / 200 கிராம் (கைக்குத்தல் கிடைத்தால் நல்லது)
  • பச்சரிசி – 1/2 குவளை / 100 கிராம்
  • வெண்பூசணி – 2 குவளை / 200 கிராம்

மாவுடன் கலப்பதற்கு:

  • முளைவிட்ட பாசிப்பயறு அல்லது நிலக்கடலை – 3 தேக்கரண்டி
  • கேரட் துருவல் – 3 தேக்கரண்டி
  • முட்டைக்கோஸ் நறுக்கியது - 3 தேக்கரண்டி
  • இந்துப்பு – 1/2 தேக்கரண்டி


Monday, October 28, 2013

இயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்

இயற்கை வாழ்வியலில் கடைபிடிக்கப்படும் உணவு முறைகளை வாசிக்கும் முன்னர், தயவு செய்து முன்னுரை மற்றும் இயற்கை வாழ்வியல் என்றால் என்ன? ஆகிய இரண்டு பதிவுகளையும் படித்து விட்டு இந்தக் கட்டுரையைத் தொடரவும். ஏனெனில் இயற்கை வாழ்வியலின் அடிப்படைக் கருத்துக்களை புரிந்து கொள்ளாமல், வெறும் உணவு முறைகளை மட்டும் வாசித்து விட்டு, அதை பின்பற்ற முயற்சித்தால், அடுத்த சில நாட்களில் உங்களுக்கு பலவிதமான மனக்குழப்பங்கள் ஏற்படலாம். ஏன், எதற்கு என்கின்ற காரணத்தை தெரிந்து கொண்டால் மட்டுமே, இந்த வாழ்வியலை சந்தேகமின்றி கடைபிடிக்க முடியும்.

இங்கு தரப்பட்டுள்ள உணவு முறைகள் பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் அனைவராலும் கடைபிடிக்கக் கூடியவை. 

Saturday, October 26, 2013

பசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்?

பாலைத் தவிர்க்க வேண்டியதற்கான சில முக்கிய காரணங்கள்:
  1. உலகில் உள்ள எந்த பாலூட்டி வகை உயிரினமும் பல் முளைக்கும் வரை / தானாக மற்ற உணவுகளை உண்ணும் வரை மட்டுமே தாய்ப்பால் அருந்துகிறது (கன்றுக்குட்டி உட்பட). இயற்கையில் மனிதர்களும் இந்த பொதுவான விதிமுறைக்கு உட்பட்டவர்கள். ஆனால் விதிவிலக்காக மனிதர்கள் மட்டும் வாழ்நாள் முழுவதும் பசுவின் பாலை அருந்திக் கொண்டிருக்கிறோம்.
  2. எந்த வகைப் பாலூட்டிகளிலும், தாய்ப்பாலானது, அதனுடைய குட்டியின் வளர்ச்சி, நோய் எதிர்ப்பு ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்து தேவைகளை முன்னிறுத்தி, இயற்கை அளித்தக் கொடையாகும். பசுவின் பால், அதன் கன்று இரண்டு வருடங்களில் வளர்ந்து, அது ஒரு கன்றை ஈனும் அளவிற்கு முதிர்ச்சி அளிக்கக் கூடியது. மாட்டிற்கு விரைவான உடல் கட்டுமானம் அடிப்படையானது. ஆனால் மனிதர்கள் விரைவான மூளை வளர்ச்சியையும் மெதுவான உடல் வளர்ச்சியையும் கொண்டவர்கள். இந்நிலையில் பசுவின் பால், மனிதர்களின் இயற்கையான வளர்ச்சிக்கு உகந்ததல்ல.

சாத்வீக சாம்பார்

சாம்பார் செய்யும் போது துவரம் பருப்பு குறைவாகவும், காய்கறிகள் அதிகமாகவும் இருக்க வேண்டும். கீழ்க்கண்ட காய்கறிகளில் ஏதாவது 2 முதல் 4 வகையான காயை, சாம்பார் செய்ய பயன்படுத்தவும்.
  • முள்ளங்கி
  • வெண்பூசணி
  • சௌசௌ
  • கத்தரிக்காய்
  • பரங்கிக்காய்
  • கேரட்
  • அவரை
  • உருளைக்கிழங்கு

கீரைக்கூட்டு

தேவையானப் பொருட்கள்: (இரண்டு நபருக்கு)
  • ஏதாவது ஒரு வகை கீரை (நறுக்கியது) – 2 குவளை
  • முளை விட்ட பாசிப்பயறு – 30 கிராம்
  • சீரகம் – 1/2 தேக்கரண்டி
  • சிறு வெங்காயம் – 5 முதல் 10 துண்டுகள்
  • வெள்ளைப்பூண்டு – 1 அல்லது 2 துண்டுகள்
  • பச்சை மிளகாய் – 1
  • இந்துப்பு – சிறிதளவு
  • தேங்காய் துருவல் மற்றும் கொத்தமல்லி தழை – சிறிதளவு (விருப்பப்பட்டால் மட்டும்)

காய்கறி பொரியல்

வெண்டைக்காய் பொரியல்
வெண்டைக்காய் பொரியல்

உங்கள் விருப்பத்திற்கேற்ப, ஏதாவது ஒரு காய்கறியில் பொரியல் செய்யலாம்.

தேவையான பொருட்கள்: (இரண்டு நபருக்கு)
  • பொடியாக நறுக்கிய காய்கறி – 150 முதல் 200 கிராம் வரை
  • சாம்பார் பொடி – 1/4 தேக்கரண்டி
  • இந்துப்பு – சுவைக்கேற்ப
  • நீர் – சிறிதளவு
  • தேங்காய் துருவல் – 1 அல்லது 2 தேக்கரண்டி

Friday, October 25, 2013

பூசணிக்காய் பொரியல்

பூசணிக்காய் பொரியல்
பூசணிக்காய் பொரியல்


செய்முறை:
  1. பூசணிக்காய் துண்டுகளை பெரிதாக நறுக்கி அதனுடன் சிறிது சீரகம் மற்றும் முழு பச்சை மிளகாய் போட்டு லேசாக வேக வைத்துக் கொள்ளவும். அடுப்பை அணைத்த பின் உப்பு சேர்க்கவும். 
  2. சூடு சற்று குறைந்த பின் விருப்பப்பட்டால் தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளலாம். 
  3. தினமும் பூசணிக்காய் சாப்பிடுவது கடினமாக இருந்தால் இடை இடையே அதற்கு மாற்றாக வேறு ஏதாவது ஒரு கொடி வகைக் காய்கறியை இதே முறையில் சமைத்து உண்ணலாம்.