தேவையான பொருட்கள்:
- வரகு அரிசி – 1 குவளை (150 gms)
- தண்ணீர் – 2 1/2 குவளை
- குடைமிளகாய் – 2 (நீளவாக்கில் நறுக்கியது)
- கடுகு – 1/2 தேக்கரண்டி
- சீரகம் – 1/2 தேக்கரண்டி
- முந்திரி பருப்பு - 8 துண்டுகள்
- நல்லெண்ணை – 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 2 சிட்டிகைகள்
- கொத்தமல்லி தழை – 2 தேக்கரண்டி
- இந்துப்பு – சுவைக்கேற்ப
குடைமிளகாய் மசாலா பொடி தயாரிக்க:
- உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
- கொத்தமல்லி விதை – 1 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் – 2 அல்லது 3
- கறிவேப்பிலை – 2 ஈர்க்கு
- துருவிய/ நறுக்கிய தேங்காய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
- சமைப்பதற்கு முன்னர் வரகரிசியை 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும். குக்கரில்அரிசியை போட்டு நீர் ஊற்றி, அதில் சிறிது இந்துப்பு மற்றும் சில துளிகள் எண்ணை சேர்த்து வேக வைக்கவும். முதல் விசில் வந்த பிறகு, தீயை குறைத்து 8 நிமிடங்கள் கழித்து, அடுப்பை அணைக்கவும். குக்கர் ஆவி போன பிறகு, சாதத்தை ஒரு அகலமான தட்டில் பரப்பி சில நிமிடங்கள் ஆற விடவும். பிறகு மீண்டும் குக்கரில் போட்டு மூடி வைக்கவும்.
- இதற்கிடையில் ஒரு வாணலியில், 'குடைமிளகாய் மசாலா பொடி தயாரிக்க' என்ற தலைப்பில் தரப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக அதே வரிசையில் போட்டு வறுத்துக் கொள்ளவும். ஆறிய பிறகு அவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து, அந்தப் பொடியை தனியே வைக்கவும்.
- வாணலியில் எண்ணை ஊற்றி, கடுகு, சீரகம், கறிவேப்பிலை மற்றும் முந்திரிப்பருப்பு போட்டு தாளிக்கவும். பின் குடைமிளகாயை சேர்த்து மூடி வைத்து வதக்கவும். தேவைப்பட்டால் இடையிடையே சிறிது நீர் தெளிக்கலாம். குடைமிளகாய் முக்கால் பதம் வெந்ததும், அரைத்து வைத்துள்ள மசாலா பொடி போட்டு, அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பின்னர் வரகரிசி சாதத்தை போட்டு மசாலா நன்றாக கலக்கும்படி கிளறவும். இறுதியில் கொத்தமல்லி தழை தூவவும். சுவைக்கேற்ப இந்துப்பு சேர்க்கவும். ஏதாவது ஒரு வகை ராய்தாவுடன் பரிமாறவும்.
- இந்த செய்முறையை வலைதளத்தில் கற்றேன். அதில் கூறப்பட்டுள்ள வெள்ளை அரிசிக்கு மாற்றாக, வரகு சிறுதானியத்தை பயன்படுத்தியுள்ளேன். இதேபோல் சாமை, குதிரைவாலி சிறுதானியம் அல்லது சீரக சம்பா (பாரம்பரிய) அரிசி வகைகளையும் சாதம் செய்ய பயன்படுத்தலாம்.
- இரண்டு அல்லது மூன்று வித நிறமுடைய குடைமிளகாயை பயன்படுத்தினால், சாதம் பார்க்க வண்ணமயமாக இருக்கும்.
No comments :
Post a Comment