தேவையான பொருட்கள்:
- கம்பு மாவு – 1 குவளை (200 கிராம்)
- தண்ணீர் – 3/4 குவளை
- இந்துப்பு – 1 சிட்டிகை
- நாட்டு சர்க்கரை – சுவைக்கு ஏற்ப
- தேங்காய் துருவல் – 1/2 குவளை
- ஏலக்காய் பொடி – 1/4 தேக்கரண்டி
செய்முறை:
- ஒரு அகலமான பாத்திரத்தில் கம்பு மாவுடன் உப்பு போட்டு ஒரு முறை விரலால் கலக்கவும். அதில் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி, கட்டிகள் சேராமல் பிசறிக் கொள்ளவும். சிறிது மாவை கையில் எடுத்து இறுக்கி பிடித்தால் ஒன்று சேர வேண்டும். அதை அப்படியே உடைத்து விட்டால் பொலபொலவென உதிர வேண்டும். இது தான் புட்டு மாவின் சரியான பதம்.
- மாவு முழுவதையும், இட்லி தட்டின் துணி மீது பரப்பவும். தட்டை இட்லி பாத்திரத்தில் வைத்து 10 முதல் 12 நிமிடங்கள் வேக வைக்கவும். அடுப்பை அணைக்கவும்.
- இட்லி தட்டை வெளியில் எடுத்து, புட்டு மாவை பாத்திரத்திற்கு மாற்றவும். அதனுடன் நாட்டு சர்க்கரை, தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி கலந்து சூடாக பரிமாறவும்.
No comments :
Post a Comment