Featured Post

Sharing our 2.5 years of experience in Life Natural

தமிழில் We have been practicing Life Natural for more than two and a half years now. I have been thinking to write a post for the past ...

Saturday, May 23, 2015

கேழ்வரகு (ராகி) ரொட்டி

கேழ்வரகு (ராகி) ரொட்டி
கேழ்வரகு (ராகி) ரொட்டி
தேவையான பொருட்கள்:

  1. கேழ்வரகு மாவு – 1 குவளை (200 கிராம்)
  2. நீர் – 3/4 குவளை
  3. வெங்காயம் – 1/4 குவளை
  4. தேங்காய் – 2 தேக்கரண்டி
  5. கறிவேப்பிலை – 2 தேக்கரண்டி
  6. இந்துப்பு – 2 சிட்டிகை (சுவைக்கேற்ப)
  7. நல்லெண்ணை – 2 தேக்கரண்டி

செய்முறை:

  1. ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை எடுத்துக் கொள்ளவும். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, தேங்காய் துண்டுகள் மற்றும் இந்துப்பு போடவும். தண்ணீரை ஊற்றி நன்றாக கலக்கவும். பாத்திரத்தை மூடி, குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் மாவை ஊற வைக்கவும்.
  2. தோசைக்கல்லை அடுப்பில் வைக்கவும். அது நன்கு சூடானதும், மாவை ஒரு கரண்டியில் எடுத்து கல்லில் ஊற்றவும். மாவு தடிமனாக இருக்கும் இடங்களில், விரல்களால் லேசாக பரப்பி விடவும். மூடி வைத்து வேகவிடவும். 
  3. இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் கழித்து, மூடியைத் திறந்து, ரொட்டியின் மேல் பகுதி மற்றும் ஓரங்களில் சில துளிகள் எண்ணையை ஊற்றவும். ரொட்டியைத் திருப்பிப் போட்டு மறுபுறமும் வேகவிடவும். 
  4. பிரவுன் நிறத்திட்டுக்கள் வந்த உடன், ரொட்டியைக் கல்லிலிருந்து எடுத்து, சூடாக பரிமாறவும்.
குறிப்பு:

  • இந்த செய்முறை, பொதுவாக அனைவரின் வீட்டிலும் செய்யப்படும் மிக எளிதான ஒன்றுதான். இதில் முக்கியமாக, ரொட்டி மாவு அதிக தண்ணீர் இல்லாமலும், அதிக கட்டியாக இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • சாப்பிடும் பொழுது, தெரியாமல் கடித்து விடக்கூடாது என்பதனால், நான் மாவில் பச்சை மிளகாய் துண்டுகள் சேர்க்கவில்லை. உங்களுக்கு விருப்பம் இருந்தால் பச்சை மிளகாய் சேர்க்கவும்.
  • ரொட்டிக்குத் தொட்டுக் கொள்ள, உங்களுக்கு விருப்பமான ஏதாவது ஒரு சட்னி, நாட்டு சர்க்கரை அல்லது காய்கறி குருமா வைத்துக் கொள்ளலாம்.

No comments :

Post a Comment