சாத்வீக இட்லி |
தேவையான பொருட்கள் - 12 முதல் 15 இட்லி தயாரிக்க
மாவு தயாரிப்பதற்கு:
- புழுங்கல் அரிசி – 1 குவளை / 200 கிராம் (கைக்குத்தல் கிடைத்தால் நல்லது)
- பச்சரிசி – 1/2 குவளை / 100 கிராம்
- வெண்பூசணி – 2 குவளை / 200 கிராம்
மாவுடன் கலப்பதற்கு:
- முளைவிட்ட பாசிப்பயறு அல்லது நிலக்கடலை – 3 தேக்கரண்டி
- கேரட் துருவல் – 3 தேக்கரண்டி
- முட்டைக்கோஸ் நறுக்கியது - 3 தேக்கரண்டி
- இந்துப்பு – 1/2 தேக்கரண்டி
செய்முறை:
- புழுங்கல் அரிசியை முதல் நாள் மதியம், குறைந்தது 4 மணிநேரம் ஊறவைக்கவும்.
- மாலையில் அரிசியை அலசிக் களைந்து விட்டு, ஆட்டுக்கல்லில் (கிரைண்டரில்) சிறிது நீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.
- இதற்கிடையில் வெண்பூசணியை தோல் நீக்கி, சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் விழுதாக அரைத்து, அதனையும் ஆட்டுக்கல்லில் மாவுடன் சேர்த்து ஒன்றாக அரைக்கவும். மாவை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக் கொள்ளவும். இதில் உப்பு சேர்க்க வேண்டாம்.
- பச்சரிசியை வெறும் வாணலியில் மூன்று அல்லது ஐந்து நிமிடங்கள் வரை வறுத்துக் கொள்ளவும். வெடிக்கத் தேவையில்லை.
- பச்சரிசி ஆறிய பின்னர், மிக்ஸியில் போட்டு சற்று கரகரப்பாக அரைத்து, அதை காற்று புகாதவாறு, ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும். இதை முதல் நாள் இரவே தயாரித்து வைத்தால், காலையில் இட்லி செய்ய எளிதாக இருக்கும்.
- மறுநாள் காலையில் பொடித்த பச்சரிசி மாவை, ஏற்கனவே அரைத்து வைத்துள்ள இட்லி மாவுடன் கலந்து, குறைந்தது 2 மணி நேரம் ஊற விடவும்.
- பிறகு முளைவிட்ட பாசிப்பயறு\ நிலக்கடலை, துருவிய கேரட், நறுக்கிய முட்டைக்கோஸ், இந்துப்பு ஆகியவற்றை மாவுடன் நன்றாக கலந்து கொள்ளவும்.
- இட்லி பாத்திரத்தில் வேக வைத்து, சாப்பிடவும்.
குறிப்பு:
- அனைத்து விதமான சிறுதானியங்களையும், புழுங்கல் அரிசிக்கு பதிலாகப் பயன்படுத்தி, இதே முறையில் இட்லி தயாரிக்கலாம்.
- கேரட், முட்டைக்கோஸ் போன்ற காய்களுக்கு பதிலாக, சௌசௌ மற்றும் பீன்ஸ் அல்லது உங்களுக்க விருப்பமான, வேறு ஏதாவது இரண்டு வகையான காய்கள் உபயோகிக்கலாம்.
Amazing documentation of recipes. Thank you so much! I have been forwarding to so many of my friends
ReplyDeleteThank you for your support in spreading Life natural concepts. Actually, we have been inspired after meeting friends like you.
Delete