Featured Post

Sharing our 2.5 years of experience in Life Natural

தமிழில் We have been practicing Life Natural for more than two and a half years now. I have been thinking to write a post for the past ...

Saturday, October 26, 2013

பசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்?

பாலைத் தவிர்க்க வேண்டியதற்கான சில முக்கிய காரணங்கள்:
  1. உலகில் உள்ள எந்த பாலூட்டி வகை உயிரினமும் பல் முளைக்கும் வரை / தானாக மற்ற உணவுகளை உண்ணும் வரை மட்டுமே தாய்ப்பால் அருந்துகிறது (கன்றுக்குட்டி உட்பட). இயற்கையில் மனிதர்களும் இந்த பொதுவான விதிமுறைக்கு உட்பட்டவர்கள். ஆனால் விதிவிலக்காக மனிதர்கள் மட்டும் வாழ்நாள் முழுவதும் பசுவின் பாலை அருந்திக் கொண்டிருக்கிறோம்.
  2. எந்த வகைப் பாலூட்டிகளிலும், தாய்ப்பாலானது, அதனுடைய குட்டியின் வளர்ச்சி, நோய் எதிர்ப்பு ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்து தேவைகளை முன்னிறுத்தி, இயற்கை அளித்தக் கொடையாகும். பசுவின் பால், அதன் கன்று இரண்டு வருடங்களில் வளர்ந்து, அது ஒரு கன்றை ஈனும் அளவிற்கு முதிர்ச்சி அளிக்கக் கூடியது. மாட்டிற்கு விரைவான உடல் கட்டுமானம் அடிப்படையானது. ஆனால் மனிதர்கள் விரைவான மூளை வளர்ச்சியையும் மெதுவான உடல் வளர்ச்சியையும் கொண்டவர்கள். இந்நிலையில் பசுவின் பால், மனிதர்களின் இயற்கையான வளர்ச்சிக்கு உகந்ததல்ல.
  3. பசும் பால், மனிதனுக்கு அதிகப்படியான கபம் உண்டாக்கக் கூடியது. இயற்கை வாழ்வியலில் கடைபிடிக்கப்படும் உணவு முறைகள் அனைத்துமே கபமற்றதாகவோ, கபம் குறைந்ததாகவோ இருக்கும். இதன் காரணமாகவும், இயற்கை வாழ்வியலின் கூற்றுப்படி மற்ற எந்த உயிரினத்தின் பாலும் மனிதனுக்கு உகந்ததல்ல.
இது குறித்து மேலும் அறிந்து கொள்ள, பின்வரும் இணையதளங்களை பார்க்கவும்:

பசுவின் பாலுக்கு மாற்று:

பசுவின் பால் அருந்துவதை தவிர்க்க இயலாதவர்கள், தேவையான பொழுது தேங்காயிலிருந்து பால் எடுத்து, பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை கலந்து அருந்தலாம். தேங்காய்ப்பாலை அடுப்பில் வைத்து சூடு படுத்தக்கூடாது.

No comments :

Post a Comment