Featured Post

Sharing our 2.5 years of experience in Life Natural

தமிழில் We have been practicing Life Natural for more than two and a half years now. I have been thinking to write a post for the past ...

Wednesday, October 30, 2013

சாத்வீக இட்லி

சாத்வீக இட்லி
சாத்வீக இட்லி

தேவையான பொருட்கள் - 12 முதல் 15 இட்லி தயாரிக்க

மாவு தயாரிப்பதற்கு:

  • புழுங்கல் அரிசி – 1 குவளை / 200 கிராம் (கைக்குத்தல் கிடைத்தால் நல்லது)
  • பச்சரிசி – 1/2 குவளை / 100 கிராம்
  • வெண்பூசணி – 2 குவளை / 200 கிராம்

மாவுடன் கலப்பதற்கு:

  • முளைவிட்ட பாசிப்பயறு அல்லது நிலக்கடலை – 3 தேக்கரண்டி
  • கேரட் துருவல் – 3 தேக்கரண்டி
  • முட்டைக்கோஸ் நறுக்கியது - 3 தேக்கரண்டி
  • இந்துப்பு – 1/2 தேக்கரண்டி


Monday, October 28, 2013

இயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்

இயற்கை வாழ்வியலில் கடைபிடிக்கப்படும் உணவு முறைகளை வாசிக்கும் முன்னர், தயவு செய்து முன்னுரை மற்றும் இயற்கை வாழ்வியல் என்றால் என்ன? ஆகிய இரண்டு பதிவுகளையும் படித்து விட்டு இந்தக் கட்டுரையைத் தொடரவும். ஏனெனில் இயற்கை வாழ்வியலின் அடிப்படைக் கருத்துக்களை புரிந்து கொள்ளாமல், வெறும் உணவு முறைகளை மட்டும் வாசித்து விட்டு, அதை பின்பற்ற முயற்சித்தால், அடுத்த சில நாட்களில் உங்களுக்கு பலவிதமான மனக்குழப்பங்கள் ஏற்படலாம். ஏன், எதற்கு என்கின்ற காரணத்தை தெரிந்து கொண்டால் மட்டுமே, இந்த வாழ்வியலை சந்தேகமின்றி கடைபிடிக்க முடியும்.

இங்கு தரப்பட்டுள்ள உணவு முறைகள் பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் அனைவராலும் கடைபிடிக்கக் கூடியவை. 

Saturday, October 26, 2013

பசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்?

பாலைத் தவிர்க்க வேண்டியதற்கான சில முக்கிய காரணங்கள்:
  1. உலகில் உள்ள எந்த பாலூட்டி வகை உயிரினமும் பல் முளைக்கும் வரை / தானாக மற்ற உணவுகளை உண்ணும் வரை மட்டுமே தாய்ப்பால் அருந்துகிறது (கன்றுக்குட்டி உட்பட). இயற்கையில் மனிதர்களும் இந்த பொதுவான விதிமுறைக்கு உட்பட்டவர்கள். ஆனால் விதிவிலக்காக மனிதர்கள் மட்டும் வாழ்நாள் முழுவதும் பசுவின் பாலை அருந்திக் கொண்டிருக்கிறோம்.
  2. எந்த வகைப் பாலூட்டிகளிலும், தாய்ப்பாலானது, அதனுடைய குட்டியின் வளர்ச்சி, நோய் எதிர்ப்பு ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்து தேவைகளை முன்னிறுத்தி, இயற்கை அளித்தக் கொடையாகும். பசுவின் பால், அதன் கன்று இரண்டு வருடங்களில் வளர்ந்து, அது ஒரு கன்றை ஈனும் அளவிற்கு முதிர்ச்சி அளிக்கக் கூடியது. மாட்டிற்கு விரைவான உடல் கட்டுமானம் அடிப்படையானது. ஆனால் மனிதர்கள் விரைவான மூளை வளர்ச்சியையும் மெதுவான உடல் வளர்ச்சியையும் கொண்டவர்கள். இந்நிலையில் பசுவின் பால், மனிதர்களின் இயற்கையான வளர்ச்சிக்கு உகந்ததல்ல.

சாத்வீக சாம்பார்

சாம்பார் செய்யும் போது துவரம் பருப்பு குறைவாகவும், காய்கறிகள் அதிகமாகவும் இருக்க வேண்டும். கீழ்க்கண்ட காய்கறிகளில் ஏதாவது 2 முதல் 4 வகையான காயை, சாம்பார் செய்ய பயன்படுத்தவும்.
  • முள்ளங்கி
  • வெண்பூசணி
  • சௌசௌ
  • கத்தரிக்காய்
  • பரங்கிக்காய்
  • கேரட்
  • அவரை
  • உருளைக்கிழங்கு

கீரைக்கூட்டு

தேவையானப் பொருட்கள்: (இரண்டு நபருக்கு)
  • ஏதாவது ஒரு வகை கீரை (நறுக்கியது) – 2 குவளை
  • முளை விட்ட பாசிப்பயறு – 30 கிராம்
  • சீரகம் – 1/2 தேக்கரண்டி
  • சிறு வெங்காயம் – 5 முதல் 10 துண்டுகள்
  • வெள்ளைப்பூண்டு – 1 அல்லது 2 துண்டுகள்
  • பச்சை மிளகாய் – 1
  • இந்துப்பு – சிறிதளவு
  • தேங்காய் துருவல் மற்றும் கொத்தமல்லி தழை – சிறிதளவு (விருப்பப்பட்டால் மட்டும்)

காய்கறி பொரியல்

வெண்டைக்காய் பொரியல்
வெண்டைக்காய் பொரியல்

உங்கள் விருப்பத்திற்கேற்ப, ஏதாவது ஒரு காய்கறியில் பொரியல் செய்யலாம்.

தேவையான பொருட்கள்: (இரண்டு நபருக்கு)
  • பொடியாக நறுக்கிய காய்கறி – 150 முதல் 200 கிராம் வரை
  • சாம்பார் பொடி – 1/4 தேக்கரண்டி
  • இந்துப்பு – சுவைக்கேற்ப
  • நீர் – சிறிதளவு
  • தேங்காய் துருவல் – 1 அல்லது 2 தேக்கரண்டி

Friday, October 25, 2013

பூசணிக்காய் பொரியல்

பூசணிக்காய் பொரியல்
பூசணிக்காய் பொரியல்


செய்முறை:
  1. பூசணிக்காய் துண்டுகளை பெரிதாக நறுக்கி அதனுடன் சிறிது சீரகம் மற்றும் முழு பச்சை மிளகாய் போட்டு லேசாக வேக வைத்துக் கொள்ளவும். அடுப்பை அணைத்த பின் உப்பு சேர்க்கவும். 
  2. சூடு சற்று குறைந்த பின் விருப்பப்பட்டால் தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளலாம். 
  3. தினமும் பூசணிக்காய் சாப்பிடுவது கடினமாக இருந்தால் இடை இடையே அதற்கு மாற்றாக வேறு ஏதாவது ஒரு கொடி வகைக் காய்கறியை இதே முறையில் சமைத்து உண்ணலாம்.

வாழைத்தண்டு பச்சடி

வாழைத்தண்டை மிகவும் சிறிய துண்டுகளாக நறுக்கி அவற்றை வெண்ணைய் கடைந்த மோரில் போட்டு சிறிதளவு உப்பு மற்றும் கொத்தமல்லித் தழை கலந்து சாப்பிடவும். விருப்பப்பட்டால் தேங்காய் துருவல் சேர்க்கவும்.

கீரைக் கூட்டு

தேவையானப் பொருட்கள்:

  • ஏதாவது ஒரு வகை (முருங்கைக் கீரை / மணத்தக்காளி / முளைக்கீரை அல்லது அமராந்த் / அரைக்கீரை) கீரை - 1 நபருக்குத் தேவையான அளவு 
  • முளை விட்ட பாசிப்பயறு - 1 டம்ளர்
  • சீரகம் – 1/2 தேக்கரண்டி
  • சிறு வெங்காயம் – 5 முதல் 10 துண்டுகள்
  • வெள்ளைப்பூண்டு – 1 அல்லது 2 துண்டுகள்
  • பச்சை மிளகாய் – 1
  • இந்துப்பு – சிறிதளவு
  • தேங்காய் துருவல் மற்றும் கொத்தமல்லி தழை – சிறிதளவு (விருப்பப்பட்டால் மட்டும்)

ஒருங்கிணைந்த இடுப்புக் குளியல்


குயினே டப்பில் அமர்ந்து கொண்டு இடுப்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். கால்கள் டப்பிற்கு வெளியே இருக்கும். வேறு ஒரு அகலமான பாத்திரத்தில் கணுக்கால்கள் மூழ்கும் அளவிற்கு வெந்நீர் ஊற்றிக் கொள்ளவும். கால் சூடு தாங்கும் வரை இருந்தால் போதும். தலைக்கு தண்ணீரில் நனைத்துப் பிழிந்த துவாலையை, தலைப்பாகையை போல் சுற்றிக் கொள்ளவும். வெந்நீர் பாதக்குளியலைப் போன்று இம்முறையில் அதிகளவு வியர்வை வருவதில்லை. எனவே முப்பது நிமிடங்கள் முடிந்த பின்னர் தண்ணீரில் தலைக்கு குளிக்கவும்.

நெல்லிக்காய் சாறு

நெல்லிக்காய் சாறு

1 சிறிய நெல்லிக்காய் இரண்டு பேருக்குப் போதுமானது. நெல்லிக்காயைக் கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு சிறிது நீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும். இதில் விதையை சுற்றியுள்ள பகுதியை முடிந்தவரை தவிர்க்கலாம். ஏனெனில் இதில் புளிப்புச் சுவை சற்று அதிகமாக இருக்கும். அரைத்த விழுதை வடிகட்டி, அந்த சாறுடன் தேவையான அளவு நீர் ஊற்றி (100 – 150 மில்லி) குடிக்கவும்.

வெந்நீர் பாதக் குளியல்


ஒரு அகலமான பாத்திரத்தில் இரு மணிக்கட்டுகள் மூழ்குமளவு வெந்நீர் ஊற்றவும்.  இதே போல் மற்றொரு அகலமான பாத்திரத்தில் இரு கணுக்கால்களும் மூழ்குமளவு வெந்நீர் ஊற்றிக் கொள்ளவும்.  நீரின் வெப்பம் கைகள் தாங்கும் அளவு இருக்க வேண்டும்.  குளியல் எடுக்கும் நபர் பருத்தியிலான எளிய ஆடை உடுத்தி இருக்க வேண்டும்.  தலைக்கு தண்ணீரில் நனைத்துப் பிழிந்த துவாலையை, தலைப்பாகையை போல் சுற்றிக் கொள்ளவும்.  பின்பு ஒரு நாற்காலியில் வசதியாக அமர்ந்து கொள்ளவும்.  இரு மணிக்கட்டுகளையும் தமக்கு முன்னால் சற்று உயரமாக உள்ள மேசையிலிருக்கும் அகலமான நீருள்ள பாத்திரத்தில் வைக்கவும்.  அதே போல் மேசைக்குக் கீழே மற்றொரு நீருள்ள பாத்திரத்தை வைத்து அதில் இரண்டு கணுக்கால்களையும் மூழ்கச் செய்யவும்.  

பஞ்சாட்சரம்

பஞ்சாட்சரம்
பஞ்சாட்சரம்

இது 5 வகையான பொருட்களாலான சாறு ஆகும். கீழேத் தரப்பட்டுள்ள அளவுகளின் படியே செய்தால், ஆப்பிள் பழச்சாறு போன்ற சுவை கிடைக்கும். இல்லையெனில் சுவை மாறி விடும்.

பச்சை தேநீர்

இயற்கை முறையில் விளைந்த பச்சை தேயிலை அல்லது மூலிகைத் தேயிலை கிடைத்தால், தேநீர் செய்து பருகலாம்.

செய்முறை:
நீரை நன்றாக சுட வைத்து அதில் 1/2 ஸ்பூன் தேயிலை போட்டு வடிகட்டி பருகவும். இதில் பால் சேர்க்கத் தேவை இல்லை. தேவைப்பட்டால் சிறிது நாட்டு சர்க்கரை அல்லது பனைவெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.

வேக வைத்த காய்கறி கலவை

காய்கறி கலவை செய்முறை; ஏதாவது இரண்டு அல்லது மூன்று வகையான காய்கறிகளை நறுக்கி அதனுடன் சிறிதளவு சீரகம் மற்றும் முழு பச்சைமிளகாய் சேர்த்து சிறிது நீர் ஊற்றி சற்று வெந்த பின் அடுப்பை அணைக்கவும். பின் உப்பு சேர்க்கவும். சூடு சற்று குறைந்த பிறகு தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறவும்.

ஆரஞ்சு பானம்

ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் நன்கு காய வைத்து (பூஞ்சை பிடிக்காமல்) சேமித்து வைத்துக் கொள்ளவும். காய்ந்த தோலை 200 மில்லி நீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி பனைவெல்லம் கலந்து பருகவும்.

கோதுமை ரவை காய்கறி உப்புமா

கோதுமை ரவை காய்கறி உப்புமா


முதலில் ஒரு பாத்திரத்தில் 3 கப் நீர் ஊற்றி கொதிக்க விடவும். அதில் 1 கப் கோதுமை ரவையுடன் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் அல்லது சௌசௌ (ஏதாவது 2 அல்லது 3 வகை காய்கறி) சேர்த்து வேகவிடவும். காரத்திற்கு ஒரு முழு பச்சைமிளகாய் சேர்க்கவும். நன்றாக வெந்த பின் அடுப்பை அணைத்து விட்டு உப்பு போட்டு கிளறவும்.

சுக்கு மல்லி பானம்

தேவையான பொருட்கள்:
மல்லி விதை - 4 பங்கு
சீரகம் - 1 பங்கு

செய்முறை:
இந்த இரண்டையும் நல்ல வெயிலில் ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரம் காய வைத்து மிக்ஸியில் அரைத்து பொடி செய்து குடுவையில் சேமித்து வைத்துக் கொள்ளவும். பானம் தயார் செய்யும் பொழுது 200 மில்லி நீரில் 1 அல்லது 1.5 ஸ்பூன் பொடி போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். பின் அதில் கருப்பட்டி (பனைவெல்லம்) கலந்து குடிக்கவும். விருப்பப்பட்டால் சிறிதளவு சுக்குப் பொடியையும் நீர் கொதிக்கும் பொழுது போடலாம்.

பச்சைக் காய்கறி கலவை

கேரட் துருவலுடன் பொடிதாக நறுக்கிய முட்டைக்கோஸ் மற்றும் வெள்ளரிப் பிஞ்சு கலந்து மொத்தம் 2 கப் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் முளை கட்டிய பச்சைப்பயறு அல்லது பாசிப்பயறு 1 கப் கலக்கவும். இதில் சிறிது இஞ்சி சாறு ஊற்றி கொத்தமல்லித் தழை போட்டுக் கிளறி சாப்பிடவும். விருப்பமானால் தேங்காய் துருவல் சேர்க்கலாம். இஞ்சி சாறுக்கு பதில் எலுமிச்சை சாறும் சேர்க்கலாம். அவ்வாறு எலுமிச்சை சாறு கலந்தால் கண்டிப்பாகத் தேங்காய் துருவல் போடக்கூடாது.

கீர்

கொத்தமல்லி கீர்
கொத்தமல்லி கீர்
வல்லாரை கீர்
வல்லாரை கீர்
பீட்ரூட் கீர்
பீட்ரூட் கீர்
கறிவேப்பிலை கீர்
கறிவேப்பிலை கீர்
பேரிச்சம் பழம் கீர்
பேரிச்சம் பழம் கீர்
கேரட் கீர்
கேரட் கீர்
கீர் வகைகள்:
கறிவேப்பிலை, மணத்தக்காளி, புதினா, கொத்தமல்லி, வல்லாரை, தூதுவளை, கரிசலாங்கண்ணி (மஞ்சள் / பச்சை) அல்லது கேரட் இவற்றில் ஏதாவது ஒன்றை கீர் தயாரிக்க பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:
மேற்குறிப்பிட்ட வகைகளில் ஏதாவது ஒன்று - 1 பங்கு
தேங்காய் துருவல் - 1 பங்கு
நாட்டு சர்க்கரை - சுவைக்கேற்ப

காய்கறி சூப்



முதலில் காய்கறி அல்லது கீரையை நன்றாக கழுவி பாத்திரத்தில் போட்டு அதனுடன் சிறிது நீர் ஊற்றி சிறிது சீரகம் மற்றும் இஞ்சி சேர்த்து வேக விடவும். ஓரளவு வெந்த பின் அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும். ஆறிய பிறகு காய் அல்லது கீரையை மிக்ஸியில் விழுதாக அரைத்து அதை மீண்டும் பாத்திரத்தில் போட்டு சூடு படுத்தவும்.  தேவையான அளவு நீர் சேர்த்துக் கொள்ளவும். இதற்கிடையில் தேங்காய் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும். சூப் குடிக்கும் அளவு சூடான பின் அடுப்பை அணைக்கவும். அதில் சிறிது மிளகு மற்றும் உப்பு போட்டு பின் தேங்காய் பால் ஊற்றி கலந்து குடிக்கவும்.

புடலங்காய் கலவை

புடலங்காய் கலவை

புடலங்காயை பொடியாக நறுக்கி அதில் தக்காளி மற்றும் பெரிய வெங்காயத்தை நறுக்கி கலந்து, தேங்காய் துருவல் சேர்த்து சாப்பிடவும். புடலங்காய்க்கு பதில் பீர்க்கன் காயையும் இதே போல் செய்து சாப்பிடலாம்.

புடலங்காய் கலவை
புடலங்காய் கலவை

காலி ஃப்ளவர் & குடைமிளகாய் கலவை

காலி ஃப்ளவர் & குடைமிளகாய் கலவை

காலி ஃப்ளவர் மற்றும் குடைமிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும். அதில் தக்காளி மற்றும் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கலந்து சாப்பிடவும். விருப்பப்பட்டால் கொத்தமல்லித் தழை அல்லது கறிவேப்பிலை + தேங்காய் துருவல் சேர்க்கவும். காலிஃப்ளவர் இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கப்பட்டிருந்தால் மட்டும் அதை சாலட் செய்ய உபயோகிக்கலாம்.

Green tea

Prepare Green tea or Herbal tea if you get the organic green leaves at organic grocery stores.

Method:
  1. Take 200 ml water in a vessel and heat it up. 
  2. Turn-off the stove before it reaches the boiling temperature. 
  3. Then put 3/4 or 1 table spoon of tea leaves in hot water. 
  4. Filter the tea after 2 to 3 minutes. 
  5. If you want sweetness, add jaggery powder or palm jaggery and stir well. Do not add milk.


Orange tea

Ingredients:
  • Orange peels
  • Palm jaggery
Method:
  1. Dry the Orange peels under sunlight very well. Ensure that fungus is not formed. 
  2. Store the peels in a container. 
  3. When you are preparing tea, take 200 ml water and boil it. 
  4. Put 1 or 2 pieces of orange peel in the water and let it boil for 5 minutes in simmer flame. 
  5. Then turn-off the stove. 
  6. Add palm jaggery, stir well and filter the tea and drink.

Dry Ginger & Coriander seeds tea

Ingredients:
  • Coriander seeds - 4 cups
  • Cumin seeds - 1 cup
  • Dry ginger powder - 1/4 table spoon
  • Palm jaggery - to taste
Method:
  1. Keep the coriander seeds & cumin seeds under sunlight for 1 or 2 hours. 
  2. Then use the mixer grinder jar (it should be dry) and make coarse powder. 
  3. Store it in a air tight container. 
  4. When you are preparing tea, take 200 ml water in a vessel and put 1 or 1.5 table spoons of Coriander & Cumin mix powder. Add dry ginger powder also. 
  5. Let it boil for 5 to 8 minutes in simmer flame. 
  6. Turn-off the stove. 
  7. Finally add palm jaggery powder, filter the tea and drink.
Note: 
  1. If you like the dry ginger taste, you may add that powder in the same container along with coriander & cumin seeds powder. 
  2. Adding dry ginger powder is optional.

Vegetable Poriyal

Ladies finger poriyal
Ladies finger poriyal

Any one of the vegetables of your choice can be used for Poriyal preparation.

Ingredients: (measurement given for 2 people)
  • Vegetable - 100 to 150 grams (chopped into small pieces)
  • Sambhar powder - 1/4 table spoon
  • Rock salt - as per taste
  • Water - as required
  • Grated coconut - 1 or 2 table spoons
Method:
  1. Wash and cut the vegetables into small pieces. 
  2. Sprinkle little bit of water and cook the vegetables for 2 to 3 minutes. Cover it with a lid while cooking. 
  3. Add Sambhar powder and mix it well. 
  4. Turn-off the stove. 
  5. Add salt to taste. 
  6. When it becomes slightly cool, add the grated coconut.
Bitter Gourd & Ladies Finger poriyal can also be made without oil.
Method for Bitter Gourd:
  1. Cut the bitter gourd into small pieces. 
  2. Add little bit of water and cook for few minutes. 
  3. When it is cooked for 3/4, add chopped tomato. 
  4. It will become mushy and mix well with bitter gourd. 
  5. Add 1/4 table spoon of chilli powder and saute for a minute. 
  6. Turn-off the stove. 
  7. Meanwhile grind 1/4 cup of grated coconut and 1/2 table spoon of cumin seeds and keep the paste ready. 
  8. After turning-off the stove, put coconut-cumin paste in the vessel, add salt and mix thoroughly.
Method for Ladies finger:
  1. Put chopped ladies finger and big onion in a pan. 
  2. Saute it for few minutes. 
  3. Add chopped tomato and saute till the vegetables become soft. 
  4. Add chilli powder and saute for a minute. 
  5. Turn-off the stove and add salt.

Greens Kootu

Ingredients: (for 2 people)
  • Chopped Greens - 2 cups
  • Sprouted green gram - 30 grams
  • Cumin seeds - 1/2 table spoon
  • Small onion - 5 to 10 pieces
  • Garlic clove - 1 or 2 pieces
  • Green chilli - 1 no.
  • Rock salt - to taste
  • Grated coconut - 1 or 2 table spoons 
  • Coriander leaves - little bit 
Method to make sprouts:
  • Soak green grams in water for minimum 4 hours on the previous day. 
  • Before going to the bed, wash the green grams twice and drain the excess water. 
  • Put that in another bowl and close it with a lid in such a way that there is a slight air flow inside the bowl. 
  • On next day morning, you will see the sprouted green grams. 
  • If you know any other alternate ways to make sprouts, please follow that.
Method to make Greens kootu:
  • Put sprouted green grams, cumin seeds, onion, garlic cloves & green chilli (without cutting or removing the stem) in a vessel, add required water and cook. 
  • When it is half cooked, add the chopped greens and cover it with lid. 
  • When it is slightly cooked, turn-off the stove and add salt. 
  • Adding grated coconut & coriander leaves are optional. But, it should be added only after the heat of the dish is reduced to a level when we can eat.

Satvik Sambhar

Always use less quantity of Pigeon peas (Toor dhal) & more vegetables to prepare Sambhar.
Use 2 to 4 varieties of the following vegetables to make Sambhar:
  • Radish
  • Ash Gourd
  • Chayote (ChoCho)
  • Brinjal
  • Pumpkin 
  • Indian bean (Broad bean)
  • Carrot
Ingredients: (for 2 people)
  • Toor dal - 50 grams
  • Vegetables - 200 grams
  • Tomato - 2 medium sized
  • Sambhar powder - 3/4 table spoon
  • Rock salt - to taste
  • Water - as required
  • Coriander leaves - little bit
  • Small onion (Optional. If you like the taste of onion, add it along with vegetables & tomato while boiling) - 10 pieces
Method:
  1. Boil Toor Dal separately and keep aside. 
  2. Wash and cut the vegetables into bigger sizes. 
  3. In a separate vessel, put the vegetables, add tomato, Sambhar powder and little bit of salt and cook for 5 to 10 minutes. 
  4. Ensure that the vegetables do not become mushy. 
  5. Now transfer the boiled toor dal in this vessel and cook for 3 to 5 minutes. 
  6. Finally turn-off the stove and add required salt and coriander leaves.

Satvik Idli

Satvik Idli
Satvik Idli

Ingredients: 

To make batter:
  • Boiled hand pound, unpolished rice - 1 cup
  • Ash Gourd chopped - 2 cups
  • Raw hand pound, unpolished rice - 1/2 cup
To mix with batter:
  • Sprouted Groundnut / Peanut - 3 table spoons
  • Grated Carrot - 3 table spoons
  • Chopped Cabbage - 3 table spoons
  • Salt - 1/2 table spoon 
Method:
  1. Soak the boiled rice on the previous day afternoon for 4 hours. 
  2. Wash and drain the water. 
  3. Wet grind the boiled rice. 
  4. Meanwhile cut the Ash gourd into small pieces. 
  5. Grind it using the mixer grinder jar first. 
  6. Then add this in the wet grinder so that it becomes a fine batter. 
  7. Store this batter in a separate bowl and cover it with a lid. Do not add salt. 
  8. Then dry roast the raw rice for few minutes (need not to sputter). 
  9. Make coarse powder using mixer grinder jar when it is cool. This should be stored in a separate air tight container.
  10. On the next day morning, mix the raw rice powder with batter. 
  11. Two hours later, add sprouted groundnuts, grated carrot, chopped cabbage and salt and mix thoroughly. 
  12. Now the batter is ready. Use the Idli pot to steam Idlis.
Note:
  • Instead of boiled rice, use millets to make idli with the same procedure.
  • Instead of Cabbage & Carrot, use Chayote (ChoCho) or Indian beans (Broad beans) or any two types of vegetables of your choice.
  • You can also find Satvik Idli made with Ladies finger and Sorghum here.

Kheer

Kheer can be prepared with any one of the following items :
Curry leaves Kheer
Curry leaves Kheer
Cilantro Kheer
Cilantro Kheer
Centella (Vallaarai) Kheer
Centella (Vallaarai) Kheer
Beetroot Kheer
Beetroot Kheer
Carrot Kheer
Carrot Kheer
  • Black Nightshade
  • Mint
  • Solanum Trilobatum (remove thorns)
  • Eclipta Alba (yellow or green)
Ingredients:
  • Any one of the above listed ingredients - 1 cup
  • Fresh grated coconut - 1 cup
  • Jaggery powder - as per taste
Method:
Take 1 cup of any one of the above listed ingredients and 1 cup of  fresh grated coconut. Grind them using a blender and extract the juice alone. Mix the jaggery powder with juice according to your taste and drink. 

Notes:
  1. While preparing Carrot Kheer, adding grated coconut is optional. The Carrot juice tastes good as it is. If you want, mix some jaggery powder and cardamom powder as well.
  2. Dates Kheer
    Dates Kheer
    Dates fruit also can be used to prepare Kheer. For that, first soak 5 to 6 pieces of dates fruit in 1 glass of water for minimum 5 hours. Then squeeze the fruits by hand very well to make pulp and drink. In case of hair loss problems, you may add 1/2 piece of lemon juice and 1 or 2 spoons of honey in the Dates kheer. It gives a good remedy within few weeks.
  3. Centella Kheer should be taken in empty stomach once or twice a week only.

Vegetable Soup

Soup can be prepared using any vegetable or few greens.

Paalak greens soup
Paalak greens soup

Example:
Vegetables: Ash Gourd, Snake Gourd, Chayote (Chuw Chuw), etc..
Greens: Paalak or Tropical Amaranth (Sirukeerai in Tamil)

Ingredients:
  1. Vegetable / greens - 1 cup
  2. Cumin seeds - 1/2 spoon
  3. Ginger - small piece
  4. Fresh Coconut milk - 1 cup
  5. Pepper powder - 1/4 or 1/2 spoon (according to the taste)
  6. Salt - 1 pinch  (according to the taste)
Method:
  1. Wash the vegetable / greens thoroughly and cut into big pieces. 
  2. Take a pan and add a small quantity of water to boil the vegetable / greens. 
  3. Add  the Cumin seeds and ginger in the pan. Once it is slightly cooked (3 to 5 minutes will be good enough), trun-off the stove. 
  4. When it becomes cool, use mixer grinder and make paste. 
  5. Transfer the paste to the same pan and add required water to get soup consistency.
  6. Heat it up for few minutes and turn-off the stove.
  7. Add salt and Pepper powder according to your taste. 
  8. Finally add the Coconut milk and mix well. 
Note:
  1. Keep the Coconut milk ready before boiling the vegetables. 

Snake Gourd Salad

Snake Gourd Salad

Method:
Cut the Snake Gourd (lengthy one is preferred) into small pieces. Add finely chopped Tomato and Onion along with the cut vegetable and mix thoroughly and eat. In the same way you may also make Ridge Gourd salad.

Optional:
Add Curry leaves + grated Coconut in this salad.

Snake gourd, Green gram sprouts,  BSD (Coconut, Coriander, Tomato)
Snake gourd, Green gram sprouts,
BSD (Coconut, Coriander, Tomato)

Cauliflower & Capsicum Salad

Cauliflower & Capsicum Salad

Method:
Cut the Cauliflower & Capsicum into tiny pieces. Add finely chopped Tomato and Onion along with these vegetables and mix thoroughly and eat.

Optional:
Add Coriander leaves or Curry leaves + grated Coconut in this salad.

Note:
Prepare this salad only if the vegetables are grown organically.

Chayote, Radish & Beetroot Salad

Chayote, Radish & Beetroot Salad
Chayote, Radish & Beetroot Salad


Chayote or Cho Cho is called as Chuw Chuw in Tamil.

Method:
Grate Chayote, Radish & Beetroot separately. Add finely chopped Tomato and Onion along with these vegetables and mix thoroughly and eat.

Optional:
Add Coriander leaves or Curry leaves + grated Coconut in this salad.

Hot water foot bath

Method:
Take two wide basins. Pour hot water till both the wrists are immersed in one of the basins. In the second basin also pour hot water till the ankles are immersed. The water temperature should be in hand bearable degrees. The person who undergoes this therapy should wear very simple cotton clothing. He/she should cover the head with a wet towel (use normal water for this and remove the excess water by squeezing it) and sit on a comfortable chair or a stool. Place another stool or table which is slightly higher than the stool on which the patient is sitting. Now place the first basin on top of the stool/table. The patient has to keep the palms till the wrist level is immersed in water. Place the second basin below the stool / table and let the patient keep the feet till the ankle level is immersed.

The temperature of the water should be maintained through out the therapy. As we use the wide basins, the temperature will reduce gradually. So it is suggested to have an assistant who can remove  1 or 2 cups of water from the basins every now and then and refill it with the warm water, to maintain the temperature through out the therapy duration.

The accumulated toxins from the body is removed through severe sweating during this therapy. Hence after the completion of the therapy let the sweat dry fully. Then take head bath in the normal (room temperature is fine) water which is essential after any kind of water therapy.

Combined hip bath

Use 'Kuhne tub' for this therapy. The patient should wear a very simple cotton clothing. He/she should cover the head with a wet towel (use normal water for this and remove the excess water by squeezing it). Then sit in the 'Kuhne tub' and pour room temperature or slightly cold water till the hip is immersed and just below Navel. In this position both the legs (from knee level to feet) will be touching the floor. Now place another wide basin with hot water and keep the feet till the ankles are immersed. 

The temperature of the hot water should be maintained through out the session. So remove 1 or 2 cups whenever the temperature reduces in the basin and refill with the hot water. Stay in this position for 30 minutes. Then take head bath in the normal (room temperature is fine) water which is essential after any kind of water therapy.

It is called 'combined' because we use normal temperature water for hip and hot water for feet.

Note:
'Kuhne tub' was specially designed for hip bath treatment by the German Naturopath 'Louis Kuhne' who lived from 1835-1901. If you would like to buy this, please contact the nearest naturopaths / naturopathy hospitals / organic stores. We have come to know that this tub is available in http://www.arockyasanthai.com/ located at Mugalivakkam based on pre-order.

Greens kootu for Diabetics

Use any one of these greens given below to prepare kootu on alternate days:
  • Drumstick
  • Black nightshade
  • Amaranth (Mulai keerai or Arai keerai in Tamil)
Ingredients:
  1. Greens of any one variety (drumstick / Black nightshade / Amaranth) - required quantity for 1 person
  2. Sprouted green grams - 1 glass
  3. Cumin seeds - 1/2 table spoon
  4. Small onion - 5 to 10 pieces
  5. Garlic cloves - 1 or 2 pieces
  6. Green chilli - 1 no.
  7. Rock salt - to taste
  8. Grated coconut & Coriander leaves - 1 to 2 table spoons (optional)
Method to make sprouts:
  • Soak green grams in water for minimum 4 hours on the previous day. 
  • Before going to the bed, wash the green grams twice and drain the excess water. 
  • Put that in another bowl and close it with a lid in such a way that there is a slight air flow inside the bowl. 
  • You will see the sprouted green grams on the next day morning. 
  • If you know any other alternate ways to make sprouts, please follow that.
Method to make Greens kootu:
  • Put sprouted green grams, cumin seeds, onion, garlic cloves & green chilli (without cutting or removing the stem) in a vessel, add required water and cook. 
  • When it is half cooked, add the chopped greens and cover it with lid. 
  • When it is slightly cooked turn-off the stove and add salt. 
Note:

  • Adding grated coconut & coriander leaves are optional. It should be added only after the heat of the dish is reduced.

Carrot, Cabbage & Sprouted Green gram Salad

Carrot, Cabbage & Sprouted Green gram Salad

Method:
Soak Green gram on the previous day for 6 hours. Wash twice and drain the excess water and put the green gram in another container before going to bed. Cover it with a lid and let there be a slight air flow. You will find the sprouted green grams in the next day morning.

Then take 1 cup of grated Carrot and 1 cup of finely chopped Cabbage. Mix all three items together and eat.

Optional:

  • Add a small quantity of finely chopped Cucumber and a few Curry leaves. You may also add few drops of Ginger extract and grated coconut in this salad.
  • Jaggery powder can be mixed while eating.
Note:
Instead of Ginger extract, you may add few drops of Lemon. In that case, do not add grated coconut. Eating lemon and coconut together is a wrong combination.

Banana stem pachadi

Method:
  1. Cut the Banana stem into tiny pieces. 
  2. Soak the pieces in thin butter milk (butter should have been removed). 
  3. Add salt to taste and little bit of chopped Coriander leaves. If you want, add some grated Coconut as well. Soaking duration should be minimum 2 hours.

Lemon with Honey Juice


Lemon with Honey Juice
Lemon with Honey Juice

Lemon in other languages:
Tamil - Elumicham pazham
Hindi - Neembu

Method: 
Squeeze the Lemon to get 3 to 4 drops in a bowl. Add 3 spoons of honey with that. Add 150ml water in the bowl. Mix thoroughly and drink.

Ash Gourd Poriyal

Ash Gourd Poriyal
Ash Gourd Poriyal

Method:
  • Cut the Ash gourd into big pieces. 
  • Add 1/4 table spoon cumin seeds and 1 green chilli (without removing the stem & cutting) and boil these items. 
  • Turn-off the stove when it is half-cooked. 
  • Add salt. 
  • Once the heat is slightly reduced, add the grated coconut which is optional. 
Note:
  • If you do not want to repeat Ash gourd in daily menu, use any other vegetables from creeper/climber plants.

Ash Gourd & Banana Stem Juice

Ash Gourd & Banana Stem Juice

Ash Gourd in other languages:
Tamil - Ven Poosanikai
Hindi - Safed Petha

Banana stem in other languages:
Tamil - Vazhai Thandu
Hindi - Yet to find

Method: 
Take the extracts of the Ash Gourd & Banana Stem separately. Add water with both the extracts to get 3/4 glass of Ash Gourd juice and 1/4 glass of Banana Stem juice. Mix the juices well and drink.

Green Gram or Chick Pea sundal

Method:
  1. Soak the Green gram (minimum 4 hours) or Chick pea (minimum 6 hours) before cooking. 
  2. Wash twice. 
  3. Use pressure cooker and boil. It should not become mushy. 
  4. Turn-off the stove. 
  5. Add salt to taste and grated coconut once it cools down.

Panchatcharam

Panchatcharam
Panchatcharam

Panchatcharam is a juice prepared with 5 ingredients. Follow the exact measurement of each item to get the exact taste of Apple juice, else the juice will not taste great.

Ingredients: (for 1 person)
  1. Ash gourd extract - 1 glass (100 ml)
  2. Banana stem extract - slightly lesser than 1/2 glass
  3. Radish extract - slightly lesser than 1/4 glass
  4. Lemon - 1/2 piece
  5. Honey - 3 table spoons
Method:

  1. First prepare the extracts of ash gourd, banana stem & radish separately. 
  2. Then mix all 3 juices together. 
  3. Squeeze lemon in it. 
  4. Mix the honey finally, stir well and drink.


Mint or Curryleaf Juice

Mint in other languages:
Tamil - Pudina
Hindi - Mint

Curryleaf in other languages:
Tamil - Kariveppilai
Hindi - Curry Patha

Method: 
Take a bunch of Mint or Curryleaves. Wash it and grind it with little bit of water. Extract the juice, add 100ml to 150ml water and drink.

சௌசௌ, முள்ளங்கி & பீட்ரூட் கலவை

சௌசௌ, முள்ளங்கி & பீட்ரூட் கலவை
சௌசௌ, முள்ளங்கி & பீட்ரூட் கலவை


சௌசௌ, முள்ளங்கி & பீட்ரூட் மூன்றையும் துருவிக் கொள்ளவும். இக்கலவையில் தக்காளி மற்றும் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கலந்து சாப்பிடவும். விருப்பப்பட்டால் கொத்தமல்லித் தழை அல்லது கறிவேப்பிலை + தேங்காய் துருவல் சேர்க்கவும்.

Bermuda Grass Juice

Bermuda grass (Arugampul) juice
Bermuda grass (Arugampul) juice

Bermuda Grass in other languages:
Tamil - Arugampul
Hindi - Dhub

Method:
Take a bunch of Bermuda Grass. Wash it and make paste by adding little bit of water. Extract the juice, add 100ml to 150ml water and drink.  Ensure that only native Indian species grown in organic farms are used. Never use the grass grown in lawns.

Boiled Vegetable side dish

Ingredients: (for 1 person)

  1. Two types of vegetables - 100 grams
  2. Cumin seeds - 1/2 table spoon
  3. Green Chilli - 1 no.
  4. Salt - to taste
  5. Grated Coconut - 2 table spoons

Method:

  1. Take any two types of vegetables, cut them into medium size pieces. 
  2. Add Cumin seeds and green Chilli (do not cut or remove stem) to the vegetables. 
  3. Add little bit of water and half cook the vegetables. 
  4. Turn-off the stove. 
  5. Add salt to taste. 
  6. When the heat is slightly reduced, add the grated Coconut and mix well.

Broken Wheat Vegetable Uppuma

Broken Wheat Vegetable Uppuma

Ingredient: (for 1 person)
  1. Any two or three types of vegetables - 75 grams
  2. Broken Wheat - 1 cup
  3. Green Chilli - 1 no.
  4. Salt - to taste

Method:
  1. Cut the vegetables into small pieces. 
  2. Boil 3 cups water in a vessel. As soon as the water starts boiling, add the broken wheat, vegetables and green Chilli. 
  3. Keep the flame in simmer and stir the mix every now and then. Once the wheat is fully cooked, turn-off the stove and add salt.

Note:
Broken Wheat (Samba wheat) is available in organic stores. No need to soak the Wheat before hand. If you wish to do that, then reduce the quantity of water, else the Uppuma will become soggy.

Raw Vegetable Salad

Ingredients:

  1. Grated Carrot, chopped Cabbage, Cucumber - 2 cups
  2. Sprouted Green gram - 1 cup
  3. Ginger extract - 1/2 table spoon
  4. Coriander leaves chopped - 1/2 table spoon
  5. Grated Coconut - 1 or 2 table spoons


Method:
Mix grated carrot, chopped cabbage & cucumber and sprouted green grams. Add ginger extract and coriander leaves. Finally add grated coconut and mix all the ingredients thoroughly.

Note: 
Instead of ginger extract, you may add few drops of lemon juice. In that case, do not mix grated coconut. Lemon & grated coconut should not be eaten together.

Bael Leaf Juice

Bael in other languages:
Tamil - Vilvam
Hindi - Sirphal

Method: 

  1. Take 12 to 18 Bael leaves for adults (For children 6 to 9 leaves are enough)
  2. Wash the leaves. 
  3. Add little bit of water and make pulp. 
  4. Extract the juice, add 100ml to 150ml water and drink. 



Indian Gooseberry Juice

Indian Gooseberry Juice

Indian Gooseberry in other languages:
Tamil - Nellikai
Hindi - Amla

Drink this juice in empty stomach. A small size Amla is sufficient to make juice for 2 adults.

Method:

  1. Wash the Amla. 
  2. Cut the flesh alone and grind it to get extract. 
  3. Add little bit of water to make the pulp. 
  4. Filter the pulp and collect the extract in a bowl. 
  5. Add two cups of water (100ml -150ml). Mix well and drink. 

Note:

  • Avoid the flesh portion around the seed as it can make the juice too sour.

கேரட், முட்டைக்கோஸ் & முளைகட்டிய பச்சைப்பயறு கலவை

கேரட், முட்டைக்கோஸ் & முளைகட்டிய பச்சைப்பயறு கலவை

பச்சைப்பயறு அல்லது பாசிப்பயறு முதல் நாளே 6 மணி நேரம் ஊற வைத்து இரவு தூங்கும் முன்பு, 1 முறை அலசி நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் போட்டு லேசாக காற்று புகும் படி மூடி விடவும். காலையில் நன்கு முளைத்திருக்கும்.

இந்த பயறு 1 கப், துருவிய கேரட் 1 கப், பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ் 1 கப் ஆகிய மூன்றையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். இதனுடன் விருப்பமானால் வெள்ளரிப் பிஞ்சு மற்றும் கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த கலவையில் இஞ்சி சாறு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து சாப்பிடவும். இஞ்சி சாறுக்கு பதில் எலுமிச்சை சாறும் சேர்க்கலாம். அவ்வாறு எலுமிச்சை சாறு கலந்தால் கண்டிப்பாகத் தேங்காய் துருவல் போடக்கூடாது.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

எலுமிச்சம் பழத்தை நறுக்கி சிறிதளவு மட்டும் சாறு எடுத்து அதனுடன் 2 அல்லது 3 ஸ்பூன் தேன் ஊற்றி தேவையான அளவு நீர் கலந்து குடிக்கவும்.

வெண்பூசணி & வாழைத்தண்டு சாறு

வெண்பூசணி & வாழைத்தண்டு சாறு

இதற்கு வெண்பூசணி சாறு முக்கால் பங்கு (3/4) மற்றும் வாழைத்தண்டு சாறு கால் பங்கு (1/4) தனித்தனியே எடுத்து கலந்து குடிக்கவும். இதை தனித்தனியாகவும் (வெண்பூசணி சாறு மட்டும் அல்லது வாழைத்தண்டு சாறு மட்டும்) தேவையான நீர் ஊற்றி குடிக்கலாம்.

புதினா அல்லது கறி வேப்பிலை சாறு

ஒரு நபருக்கு 1 கைப்பிடி அளவு மிக்ஸியில் போட்டு சிறிது நீர் ஊற்றி அரைக்கவும். இந்த விழுதை வடிகட்டிப் பின் தேவையான அளவு நீர் சேர்த்து பருகவும்.

அருகம்புல் சாறு

அருகம்புல் சாறு
அருகம்புல் சாறு

ஒரு நபருக்கு 1 கைப்பிடி அளவு அருகம்புல் தேவை. இதை அம்மிக் கல்லில் வைத்து விழுதாக அரைத்து, வடிகட்டி, தேவையான நீர் ஊற்றி பருகலாம். மிக்ஸியில் போடுவதால் அதன் குணம் மாறி விடும்.

வில்வ இலை சாறு

பெரியவர்களுக்கு 1 நபருக்கு 12 முதல் 18 இலைகள் மட்டும் போதும். 1 கொத்தில் 3 இலைகள் இருக்கும். எனவே 4 முதல் 6 கொத்துக்களை உபயோகிக்கவும். இலையுடன் சிறிது நீர் ஊற்றி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதை வடிகட்டி தேவையான நீர் ஊற்றி குடிக்கவும்.

Thursday, October 24, 2013

இயற்கை வாழ்வியல் - முன்னுரை

In English

இயற்கை வாழ்வியல் என்பது இயற்கை மருத்துவச் செம்மல் திரு. பாலகிருஷ்ணன் அவர்களால் ஏழு நாட்கள்  நடத்தப்படும் பணிமனையாகும். மனிதர்கள் எந்த விதமான நோய்களும் மருந்துகளும் இன்றி இயற்கை முறையில் ஆரோக்கியமான வாழ்க்கை வாழக் கற்றுக் கொடுப்பதே இப்பணிமனையின் நோக்கமாகும். இறைவனின் (இயற்கையின்) அருளால் இந்நிகழ்வில் பங்கு கொள்ள முடிந்தது. நாங்கள் இந்த பயிற்சியில் கற்றுக் கொண்ட, அன்றாட வாழ்வில் கடைபிடிக்கும் நெறிமுறைகளை இவ்வலைப்பூ மூலம் பகிர்ந்து கொள்ளவிருக்கிறோம்.


இயற்கை வாழ்வியல் என்றால் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கும் முன்னர், ஆரோக்கியமான உணவு மற்றும் உடல் நலம் பற்றிய எங்கள் கேள்விகளையும், தேடல்களையும் பற்றி குறிப்பிட்டாக வேண்டும். ஏனெனில் இங்கு பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்கள், எங்களைப் போலவே ஆரோக்கியமான வாழ்க்கை பற்றிய தேடல் உள்ளவர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

திருமணத்திற்கு பிறகு, நமக்குத் தேவையான சத்தான உணவை நமது வீட்டிலேயே சமைத்து உண்ணலாம் என்றும் அதன் மூலம் நல்ல உடல் நலத்துடன் வாழலாம் என்றும் நினைத்திருந்தோம். அதன் படியே சத்துக்கள் நிறைந்ததாக நம் மருத்துவர்கள் மற்றும் நம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள உணவு வகைகளான பால் (அதில் கலந்து குடிக்கும் கலவை), முட்டை, அதிகமான பழ வகைகள், காய்கறிகள் போன்றவற்றை சாப்பிட்டும் வந்தோம். இருந்தாலும் எங்கள் இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைபாடு என்பது ஒரு தொடர்கதையாகவே  இருந்தது. ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு மருத்துவ நிபுணரை சந்திப்பதும் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதும்  தொடர் நிகழ்வானது.

இந்நிலையில் எனக்கு இருந்த உடல் உபாதைக்காக சிறிய அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். ஆனால் அறுவை சிகிச்சைக்கு பிறகும் பிரச்சினையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு காலகட்டத்தில் இதன் காரணமாக என்னுடைய வேலையையும் துறந்தேன். வீட்டில் இருந்து உடல் நலத்தை முழுமையாக கவனித்துக் கொள்ள முடியும் என்று நினைத்தேன். உடற்பயிற்சி மையத்தில் சேர்ந்து சில மாதங்கள் பயிற்சி செய்து வந்தேன். ஆங்கில மருத்துவத்திற்கு மாற்றாக இருவரும் ஹோமியோபதி முறைக்கு மாறினோம். ஆனாலும் வேறு சில உடல் உபாதைகள் அதிகரிக்கத் தொடங்கியதால் பயிற்சி மையத்திற்கும் செல்ல முடியாமல் போனது.

கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் எதிர்கொண்ட அனுபவங்கள், எங்கள் மனதில் கீழ்க்கண்ட வினாக்களை எழுப்பியது.
  • ஊட்டச்சத்து நிரம்பிய உணவு என்பது எது?
  • நாம் ஊட்டச்சத்து மிக்க உணவையே உட்கொண்டாலும் ஏன் நோய்வாய்ப்படுகிறோம்?
  • உணவு பொருட்களுக்கும் நாம் உண்ணும் முறைகளுக்கும் நோய்கள் ஏற்படுவதற்கும் தொடர்பு உள்ளதா?
  • மருத்துவத் துறை அதி வேகமான / நவீன வளர்ச்சியைக் கண்டிருந்தாலும், ஏன் இன்னும் பல வியாதிகளை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை அல்லது உருவாகாமல் தடுக்க முடியவில்லை?
  • ஏன் மென்மேலும் புதிய வியாதிகள் உருவாகின்றன?
  • மனிதர்கள் நோயின்றி வாழ்வதற்கான சாத்தியமே இல்லையா?

இத்தகைய கேள்விகள் மனதில் எழுந்த போது அவற்றிற்கான பதில்களைத் தேட ஆரம்பித்தோம். அதில் மிக முக்கியமாக நாம் சந்தைகளில் / கடைகளில் வாங்கும் உணவுப் பொருட்கள் உண்மையிலேயே சத்துக்கள் நிரம்பியவைதானா என்று சிந்தித்துப் பார்த்ததில், இல்லை என்பதே பதிலாக இருந்தது. ஒவ்வொரு உணவுப் பொருளிலும் விளைவிப்பதில் துவங்கி நுகர்வோரான நம்மை வந்தடையும் வரை பல விதமான இரசாயனங்களின் சேர்க்கை தவிர்க்க இயலாத ஒன்றாக மாறி விட்டது. இந்த உண்மை நன்கு தெரிந்திருந்தாலும், நம்மால் மட்டும் இதற்கு வழி காண முடியாது என்று அனைவரையும் போலவே நாங்களும் அத்தகைய இரசாயனங்கள் கலந்த பொருட்களை வாங்கி வந்தோம். 

இந்த சூழ்நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் ஆனந்த விகடன் இதழில் எழுதிய 'மூன்றாம் உலகப்போர்' என்ற தொடர்கதையை படிக்க நேர்ந்தது. அத்தொடர் உலக மயமாக்கல் காரணமாக சுற்றுப்புற சூழலில் ஏற்பட்டிருக்கும் கேடுகள், நம் நாட்டில் விளைநிலங்கள் மற்றும் சிறு, குறு விவசாயிகளின் வீழ்ச்சிக்கான காரணங்களை தெள்ளத்தெளிவாக விளக்கியது. இது நுகர்வோராக நம்மால் என்ன செய்ய முடியும் என்று கையைக் கட்டிக் கொண்டிருந்த எங்களை மிகவும் சிந்திக்க வைத்தது. இதன் காரணமாக நாங்கள் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவு பொருட்களை மட்டுமே வாங்குவதென்று முடிவு செய்து அதை உடனடியாக செயல்படுத்தவும் தொடங்கினோம்.

மூன்றாம் உலகப்போர் தொடருக்குப் பின்னர், ஆனந்த விகடன் மீண்டும் ஒரு சிறந்த தொடரை வெளியிடத் துவங்கியது. அது சித்த மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் எழுதி வரும் 'ஆறாம் திணை' ஆகும். இத்தொடரானது நம் மூதாதையர்கள் பழங்காலத்திலிருந்து, கடந்த இரண்டு தலைமுறைக்கு முன்பு வரை உண்டு வந்த பாரம்பரிய அரிசி வகைகள் மற்றும் சிறுதானியங்களை அறிமுகப்படுத்தியது. அன்று முதல் பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசியுடன் இடைஇடையே பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்களையும் சமையலில் பயன்படுத்த துவங்கினோம். சில மாதங்களில் உடல் நலத்திலும் சிறிய முன்னேற்றத்தை உணர முடிந்தது. இருப்பினும் முழுமையான ஆரோக்கியம் என்பது கிடைக்கவில்லை.

இந்த சூழ்நிலையில்தான், என் கணவரின் நண்பர் திரு.ஜெய் அவர்கள்  மூலம் கோயம்பத்தூரில் நடைபெறவிருந்த இயற்கை வாழ்வியல் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இத்தகைய அரிய சந்தர்ப்பத்தை அளித்ததற்காகவும், நாங்கள் அறிந்து கொண்ட ஆரோக்கிய வாழ்க்கைக்கான இரகசியத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தமைக்கும் அந்த நண்பருக்கு இவ்வலைப்பூ மூலம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

இயற்கை வாழ்வியல் மனிதகுலத்திற்கு தரும் நன்மைகளை அறிந்து கொண்ட பிறகு, அதை ஒரு இரகசியம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும். ஏனெனில் விஞ்ஞானம் கண்டுபிடித்த ஊட்டச்சத்து மிக்க உணவு என்கின்ற ஒரு வார்த்தையை பின்பற்றி நாம் அனைவரும் தவறான உணவு பழக்கத்திற்கு மாறிவிட்டிருக்கிறோம். நமது வாழ்க்கை முறையும் விஞ்ஞான வளர்ச்சி அல்லது நாகரிகம் என்கின்ற பெயரில், இயற்கையிலிருந்து முற்றிலும் விலகி செயற்கையானதாக மாறிவிட்டது. நம்முடைய தவறான கருத்துக்களினாலும் அணுகுமுறைகளினாலும், நமது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது இந்த பூமியில் வாழும் மற்ற உயிரினங்களுக்கும், ஏன் இந்த பூமிக்குமே அழிவை உண்டாக்கிக் கொண்டிருக்கிறோம். 

ஒரு பொருளை எந்த இடத்தில் தொலைத்தோமோ, அதை அந்த இடத்தில் தேடினால் மட்டும் தான் கண்டுபிடிக்க முடியும். அதுபோல நமது ஆரோக்கியத்தை பாரம்பரிய உணவு மற்றும் வாழ்வியல் முறைகளில் தொலைத்து விட்டு, அதற்கான தீர்வை நவீன விஞ்ஞானத்திடமும் / மருத்துவத்திடமும் தேடிக்கொண்டிருக்கிறோம்.தற்போதைய சூழ்நிலையில், நம்மில் பலருக்கும், எதைத் தொலைத்தோம் என்பது கூட தெரியாமல் போய்விட்டது. சில சமயம், அது தெரிந்திருந்தாலும், அதற்கான தீர்வைத் தேடுவதிலும் விருப்பம் இருப்பதில்லை. ஒருவேளை தீர்வு கிடைத்தாலும், அதற்கான வழிமுறைகளை செயல்படுத்துவதை விரும்புவதில்லை. கடந்த சில வருடங்களாக, மருத்துவம் என்கின்ற உயரிய சேவை ஒரு வியாபாரமாக மாறிவிட்டது என்பதை நாம் நன்றாகவே உணர்ந்துள்ளோம். ஒரு வியாபாரியின் முதன்மையான நோக்கம் எதுவாக இருக்கும் என்பது தெரிந்தும், நம் உயிர் குறித்த அறியாமையினால் வரும் பயத்தின் காரணமாக மீண்டும் மீண்டும் அதே மருத்துவ முறைகளை நாடுகிறோம். 

இயற்கை வாழ்வியல் நமது உடல், உயிர் மற்றும் மனம் ஆகிய மூன்றுக்கும் உள்ள தொடர்பை விளக்குகிறது. யார், எத்தகைய உணவை, எப்படி, எங்கே, எந்த சூழலில் உண்ண வேண்டும் என்று கற்றுத் தருகிறது. இவ்வுலகில் நோய் என்ற ஒன்று இல்லை என்றும், நம்மால் நோய்கள் என்று தற்போது குறிப்பிடப்படும் உடல் பருமன், மலச்சிக்கல், அஜீரணம், தைராய்டு, சர்க்கரை வியாதி, இரத்தக் கொதிப்பு, ஆஸ்துமா, புற்றுநோய், குழந்தைப் பேறின்மை, பெண்களுக்கு உண்டாகும் உடல் நலக் கோளாறுகள், குழந்தைப் பிறப்பின் போது உண்டாகும் பிரச்சினைகள் போன்றவற்றிற்கான காரணங்களையும் விளக்குகிறது. இத்தகைய பிரச்சினைகள் நமக்கு ஏற்படாமல் நல்வாழ்வு வாழவும், தற்போது இத்தகைய வியாதிகளினால் அவதிப்படுபவர்கள், அதிலிருந்து குணமடைய சரியான உணவு பழக்க வழக்கத்தையும், சூரிய ஒளி, நீர் மற்றும் மண் கொண்டு எளியமுறையில் நமக்கு நாமே செய்து கொள்ளக்கூடிய சிகிச்சை முறைகளையும் கற்றுத் தருகிறது. சுருக்கமாகச் சொல்வதெனில் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் எனும் ஐம்பூதங்களினால் ஆன நமது உடல், அதே இயற்கையுடன் ஒன்றி வாழும் வாழ்வியல் முறைகளைக் கற்றுத் தருகிறது.

இந்த பயிற்சி முகாம் முடிவுற்ற பொழுது, நாங்கள் அதுவரை தேடிக்கொண்டிருந்த அத்தனை வினாக்களுக்கும் விடை கிடைத்தது. குறிப்பாக இயற்கையில் விளைவிக்கப்பட்ட பொருட்களை உண்பதால் மட்டுமே உடல் நலம் கிடைத்து விடாது. உணவை எந்த முறையில் உட்கொள்ள வேண்டும் என்ற இரகசியத்தை அறிந்து கொண்டோம். பயிற்சி முகாம் துவங்கிய இரண்டாவது நாளிலேயே நாங்கள் மாத்திரை எடுத்துக் கொள்வதை நிறுத்தி விட்டோம். கடந்த மே மாதம் முதல் இன்று வரை, இயற்கை வாழ்வியலை தொடர்ந்து கடைபிடித்து வருவதன் மூலம் அந்நாள் வரை அச்சுறுத்தி வந்த அனைத்து விதமான நோய்களிலிருந்தும் விடுபட்டு ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறோம். இப்போது எந்த மருத்துவரிடமும் செல்ல வேண்டிய அவசியமின்றி, எந்த விதமான மருந்துகளின் தேவையுமின்றி நலமாக வாழ முடிகிறது. இப்போது சனிக்கிழமை என்பது இயற்கை அங்காடிக்கு சென்று அங்குள்ள இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப்பொருட்களை வாங்கி மகிழ்வதற்கான நாளாக மாறிவிட்டது.

இயற்கை வாழ்வியல் பணிமனை என்பது வருடத்தில் ஒரு சில முறை மட்டுமே நடைபெறுவதால், விருப்பமுள்ள அனைவருக்கும், அதில் பங்கு கொள்ள வாய்ப்பு உடனே கிடைப்பதில்லை. ஆகையால் தான், எங்கள் குரு திரு. பாலகிருஷ்ணன் ஐயா அவர்களின் விருப்பதின் படி, இயற்கை வாழ்வியல் கருத்துக்கள் மக்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு, இந்த வலைப்பதிவின் மூலம் நாங்கள் கற்றுணர்ந்த வாழ்க்கை முறையை, உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். 

'எல்லாரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே.'

என்கின்ற தாயுமானவரின் பிரார்த்தனையை போல,உலக மக்கள் அனைவரும் இயற்கை வாழ்வியலை கடைபிடித்து முழுமையான உடல் மற்றும் மனநலத்துடன் இன்பமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே இறைவனிடம் எங்களுடைய வேண்டுதல் ஆகும்.


Passions & Practices

Here we share some of our passions and the practices we do to live and cherish those passions.




Tuesday, October 22, 2013

An Introduction to "Life Natural"

Life Natural is a seven days workshop conducted by Shri.G.Balakrishnan on living a healthy natural life, without any medicines and sufferings.  We were blessed to attend this workshop and we have got awareness on human physiology, natural diet practices, life force and processes of extreme elimination.  We will be sharing some of the learnings from this workshop, which we also practice on a day to day basis i.e. the diet practices.

Before we proceed to know ‘what is Life Natural’, we would like to share our quest for nutritious food and a healthy life. If you have also come across these questions, the information shared in this post will be helpful.

After marriage, we decided to cook nutritious food at home so that we could live a healthy life. Based on that, we started eating food items which have been considered as nutritious by doctors and most of us. Some of these items include, milk (with health drink mix), eggs, lots of fruits and vegetables. Even then, we could not lead a healthy life. Every Saturday we used to go to hospitals, consult doctors and buy medicines.

At some point, I had to undergo a minor surgery. However there was no improvement in my health. After some time, I resigned my job considering that I had to spend time to take care of my health. Later, I joined gym and practiced for few months. Meanwhile, both of us shifted to Homeopathy treatment. Though there was a slight improvement, I faced new health issues. Due to that I could not go to gym regularly.

The kind of problems we had gone through raised the following questions:
  • What is nutritious food?
  • Why do we fall sick though we consume so-called ‘nutritious food’?
  • Is there any relationship between our food, food habits and diseases?
  • The medical science has developed enormously.  Yet, it could neither cure diseases nor prevent them. What is the reason?
  • Why there are many new diseases spreading?
  • Is there a chance for human beings to live a disease free life?

We started thinking on these lines and the first point came to our mind was about the food items available in the market. We realised that each and every product is being processed with lot of chemicals from cultivation, till it reaches end consumers.  Most of us are aware of the ill-effects of the chemicals used in such processing. Yet, we consume such products/produce thinking ‘what an individual can do to avoid such things?’. 

Ananda Vikatan magazine published a series called ‘Moonraam Ulaga Por’ (Third world war) written by the famous Tamil Lyricist Mr.Vairamuthu, and that became a turning point for us. The series revealed the damages caused to environment and the problems faced by small scale farmers due to chemical based farming. Then we decided to act against this and we stopped buying food items produced using chemical fertilizers and pesticides and started buying organic food items.

After ‘Moonraam Ulaga Por’ series, Anada Vikatan published yet another series called ‘Aaraam Thinai’. It is being written by Siddha doctor Mr.G.Sivaraman. This series gave the knowledge on the traditional rice & millet varieties which used to be the staple food for our ancestors and forgotten by last two generations. Then we started using millets in our menu on alternate days. We could feel a little bit of improvement in our health. However it did not help us to achieve holistic health.

One fine day, we got a call from our friend Mr.Jay asking us to participate in Life Natural workshop. We take this as an opportunity to thank to him. Without him we would not have got the chance to attend the Life natural workshop. Also we would not have been able to share the secrets of healthy living with all of you.

We believe ‘secret’ is more appropriate here, as we have experienced the wonders of Life Natural by practicing it in our day-to-day life.  We realized that how stupid and blind-folded we were in agreement with the so-called ‘nutritious food’ (the term defined by modern science) and how that changed our food habits to something which is completely inappropriate to our physiology.  By following such forged, inappropriate food habits, we are not just spoiling our health but also other living species and our Mother Earth herself. 

When we lose something and search for it, we should be searching in the exact place, where we actually lost it.  But, after losing nature based tradition, food and healthy living, we are constantly searching for it and seeking solutions from Science. In the modern era, most of us are not even aware of what is lost. Though few of us are aware of it, still do not want to search for the solution. It just shows our interest on our own well-being. All of us would agree that medicine based on science, has now-a-days evolved into more of a business than a noble service.  Like any other business, for hospitals, medicos and pharma companies, the prime motto is to multiply revenue.  All of us knew about these facts, yet we completely surrender our lives and outsource our health to these people, only because of our fear for death.

Life Natural explains the relationship between the body, life & mind. It teaches who should eat, what to eat, where to eat, when to eat and how to eat. According to Life Natural ideologies, disease does not exist in this world. It explains why the following health problems (those we call as diseases) occur like obesity, constipation, indigestion, thyroid, diabetes, blood pressure, asthma, cancer, infertility, women related health issues. Life Natural teaches right food habits and simple treatments using sun light, water & mud, to overcome such diseases. 

After completing this workshop, we came to know that all our questions were answered and our prolonged search has come to an end.  We realised that a healthy life cannot be achieved by not just eating organic produces, but also by following the right method of eating.  We stopped taking medi-SINs from the second day of the workshop. We have been practicing ‘Life Natural’ since May-2013 and we have come out of all kinds of illness. Now we are able to lead a healthy life with no dependency on medicines and doctors. 
After all these, we cherish each Saturday in buying organic products and volunteering for organizations promoting safe food and organic farming.

Now our one and only prayer is:
ENABLE EACH AND EVERY SOUL IN THIS WORLD TO LIVE A HEALTHY AND HAPPY LIFE.