Featured Post

Sharing our 2.5 years of experience in Life Natural

தமிழில் We have been practicing Life Natural for more than two and a half years now. I have been thinking to write a post for the past ...

Saturday, October 26, 2013

சாத்வீக சாம்பார்

சாம்பார் செய்யும் போது துவரம் பருப்பு குறைவாகவும், காய்கறிகள் அதிகமாகவும் இருக்க வேண்டும். கீழ்க்கண்ட காய்கறிகளில் ஏதாவது 2 முதல் 4 வகையான காயை, சாம்பார் செய்ய பயன்படுத்தவும்.
  • முள்ளங்கி
  • வெண்பூசணி
  • சௌசௌ
  • கத்தரிக்காய்
  • பரங்கிக்காய்
  • கேரட்
  • அவரை
  • உருளைக்கிழங்கு

 தேவையான பொருட்கள்: (இரண்டு நபருக்கு)
  • துவரம் பருப்பு – 50 கிராம்
  • காய்கறிகள் – 200 கிராம்
  • தக்காளி – 2 (நடுத்தர அளவுடையது)
  • சாம்பார் பொடி – 3/4 தேக்கரண்டி
  • கொத்தமல்லி தழை - சிறிதளவு
  • இந்துப்பு & நீர் – தேவையான அளவு
  • சிறிய வெங்காயம் – 10 (வெங்காயம் சாப்பிடுபவராக இருந்தால் மட்டும், இதை காய்கறிகள் வேகும் போது போடவும்)

செய்முறை:
  • துவரம் பருப்பை மட்டும் தனியாக குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
  • காய்கறிகளை நீரில் நன்றாக கழுவிய பின்னர், பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
  • மற்றொரு பாத்திரத்தில் காய்கறிகள், நறுக்கிய தக்காளி மற்றும் சாம்பார் பொடி, அனைத்தையும் ஒன்றாக போட்டு வேகவைக்கவும்.
  • காய்கள் முக்கால்வாசி வெந்த பிறகு, வேக வைத்த துவரம் பருப்பை, காய்கறி பாத்திரத்தில் ஊற்றவும்.
  • 3 முதல் 5 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். இறுதியில் கொத்தமல்லி தழை தூவி, தேவையான அளவு இந்துப்பு போட்டு கலக்கவும்.

No comments :

Post a Comment