Featured Post

Sharing our 2.5 years of experience in Life Natural

தமிழில் We have been practicing Life Natural for more than two and a half years now. I have been thinking to write a post for the past ...

Showing posts with label இயற்கை வாழ்வியல். Show all posts
Showing posts with label இயற்கை வாழ்வியல். Show all posts

Sunday, December 30, 2018

இயற்கை வாழ்வியலுக்கு மாறுவதற்கான எளிய, படிப்படியான வழிமுறைகள்




இந்த வலைப்பதிவைத் தொடர்ந்து படித்து வரும் அன்பர்கள் ஒரு சிலருக்கு இயற்கை வாழ்வியலுக்கு மாறவேண்டும் எனும் விருப்பம் எழலாம். அவ்வாறு ஒருவேளை விருப்பம் இருந்தாலும், இங்குத் தரப்பட்டுள்ள உணவு முறைகளை உடனடியாக முழுமையாகப் பின்பற்ற ஒரு சிலருக்கு இயலாமல் போகலாம். மாற்றத்தை எங்கிருந்துத் தொடங்குவது என்ற சந்தேகம் எழலாம். காலம் காலமாக நம் சமுதாயத்தில் நடைமுறையில் இருக்கும் பழக்கவழக்கங்களை திடீரென்று மாற்றுவது அத்தனை சுலபமாக அனைவருக்கும் இருக்காது. 

Friday, March 2, 2018

இயற்கை கேரட் அல்வா

இயற்கை கேரட் அல்வா
இயற்கை கேரட் அல்வா

தேவையான பொருட்கள் (1 நபருக்கு):

  1. துருவிய கேரட் – 1 குவளை 150 கிராம்
  2. பேரிச்சம் பழம் – 6 எண்ணிக்கை
  3. இளம் தேங்காய் – 1 மூடி
  4. பாதாம் பருப்பு – 4 எண்ணிக்கை
  5. ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை


Tuesday, September 5, 2017

முளைகட்டியப் பாசிப்பயறு பெசரட்டு

முளைகட்டியப் பாசிப்பயறு பெசரட்டு
முளைகட்டியப் பாசிப்பயறு பெசரட்டு
தேவையானப் பொருட்கள்:
  1. பாசிப்பயறு – 1 குவளை (100 கிராம்)
  2. இஞ்சி – 1/2 இன்ச் துண்டு
  3. சீரகம் – 1/2 தேக்கரண்டி
  4. மிளகு - 1/2 தேக்கரண்டி
  5. பெரிய வெங்காயம் – 1
  6. இந்துப்பு - சுவைக்கேற்ப

Monday, September 4, 2017

குதிரைவாலி அடை தோசை

குதிரைவாலி அடை தோசை
குதிரைவாலி அடை தோசை
தேவையான பொருட்கள்: (8 முதல் 9 எண்ணிக்கை)
மாவு தயாரிக்க:

  1. குதிரைவாலி -  1 குவளை (200 கிராம்)
  2. சுண்டல் / கொண்டைக்கடலை – 1/4  குவளை (50 கிராம்)
  3. பெருங்காயம் – 1 சிட்டிகை
  4. மிளகு – 12 to 15 எண்ணிக்கை

மாவில் சேர்க்க:

  1. கறிவேப்பிலை – 2 ஈர்க்கு
  2. கொத்தமல்லி – 2 கொத்து
  3. சிறிய / பெரிய வெங்காயம் – 1/4 குவளை
  4. இந்துப்பு - சுவைக்கேற்ப


Sunday, May 21, 2017

சோளம் சாத்வீக இட்லி

சோளம் சாத்வீக இட்லி
சோளம் சாத்வீக இட்லி

தேவையான பொருட்கள் - 10 முதல் 12 இட்லி தயாரிக்க:

மாவு தயாரிப்பதற்கு:

  1. சோளம் – 1 குவளை (150 கிராம்)
  2. சோள அரிசி – 1/4 குவளை (50 கிராம்)
  3. வெண்டைக்காய் – 1 குவளை (150 கிராம்)
  4. வெந்தயம் – 1/2 தேக்கரண்டி


மாவுடன் கலப்பதற்கு:

  1. முளைவிட்ட பாசிப்பயறு அல்லது நிலக்கடலை – 3 தேக்கரண்டி
  2. கேரட் துருவல் – 3 தேக்கரண்டி
  3. முட்டைக்கோஸ் நறுக்கியது - 3 தேக்கரண்டி
  4. இந்துப்பு – சுவைக்கேற்ப


Sunday, February 12, 2017

வாழும் வனம்

வாழும் வனம்

ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு, இந்த வலைப்பதிவின் மூலம் எங்களது மகிழ்ச்சியை உங்களிடையேப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம். புகழ்பெற்றக் கவிஞர் திரு.வைரமுத்து அவர்களின் 'மூன்றாம் உலகப்போர்' தொடர்கதையை ஆனந்த விகடன் இதழில் படிக்கத் தொடங்கியது முதல் எனக்கும் என் கணவருக்கும் இரசாயன உரங்கள் இடாத, இயற்கை வழி வேளாண்மை செய்ய வேண்டும் எனும் விதை மனதில் வேர் விட்டது. அதன் காரணமாகக் கடந்த ஐந்து வருடங்களாக விவசாயம் செய்வதற்கான நிலத்தைத் தேடிக் கொண்டிருந்தோம். இயற்கையின் ஆசிர்வாதத்தால், எங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு இந்தத் தோட்டம் சமீபத்தில் எனது கணவரின் பூர்வீக ஊருக்கு அருகிலேயே கிடைத்து விட்டது. இத்தோட்டத்திற்கு ‘வாழும் வனம்’ என்று பெயரிட்டுள்ளோம். இவ்வனம் அமைந்துள்ள இடத்தின் வரைபடம் கீழேத் தரப்பட்டுள்ளது. வனத்தின் புகைப்படங்களை வரைபடத்தில் காணலாம்.


பல வருடங்களாக நிலம் தேடும் முயற்சியில் ஈடுபட்டு, இந்தத் தோட்டத்தைக் கண்டுபிடித்து எங்களுக்குக் காண்பித்த எனது கணவரின் உடன்பிறந்த சகோதரர் திரு.கண்ணன் அவர்களுக்கும் மற்றும் உடன்பிறவா சகோதரர் திரு. அமுல்ராஜ் அவர்களுக்கும், மேலும் இந்தத் தோட்டத்தில் இத்தனை வருடங்களாக மரங்களை நட்டும் அவற்றை அதிக இரசாயனங்களைத் தெளிக்காமல் பராமரித்தும் வந்த அனைத்து நல்லிதயங்களுக்கும் இத்தருணத்தில் கோடானுகோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். எங்களுடைய அனைத்து முயற்சிகளுக்கும் இன்று வரை ஊக்கமளித்து வரும் நலம் விரும்பிகளுக்கும் மிக்க நன்றி. அதுபோலவே இனிமேல் நாங்கள் மேற்கொள்ளவிருக்கும், ஒவ்வொரு முயற்சிக்கும் உங்களுடைய ஆதரவும், ஆசிகளும் தொடரவேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோளாகும்.

தற்பொழுது இந்தத் தோட்டத்தில் தென்னை, செடி முருங்கை, அகத்தி, பலா, மா, கொய்யா ஆகிய மரங்கள் பலன் தரக்கூடிய நிலையில் உள்ளன. இனி வரும் காலங்களில், இங்கு ஜப்பானைச் சார்ந்த ‘எதுவும் செய்யாத வேளாண்மை’ முறையைக் கற்றுத்தந்த முன்னோடி விவசாயியான காலம் சென்ற அய்யா திரு. மசானபு ஃபுகோகா மற்றும் தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்தை உயிர்பெறச் செய்த காலம் சென்ற அய்யா திரு.நம்மாழ்வார் அவர்களின் அடிப்படைக் கருத்துக்களைப் பின்பற்றி, எங்களது தற்சார்பு வாழ்க்கைக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் பழவகைகளை உற்பத்தி செய்யவிருக்கின்றோம். ‘வாழும் வனம்’ எனும் பெயருக்கேற்றபடி, இத்தோட்டத்தில் அனைத்து வகையான தாவரங்களை இடம்பெறச்செய்து அதன் மூலம் மற்ற பறவைகளும், உயிரினங்களும் தாமாகவே இத்தோட்டத்தில் வந்து வாழ்வதற்கான பல்லுயிர் சூழலை ஏற்படுத்த விழைகின்றோம்.

மேலும், நஞ்சில்லாத விளைபொருட்களை எவ்வாறு முறைப்படி உண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வது என்று இயற்கை மருத்துவச் செம்மல் அய்யா திரு. ஜி. பாலகிருஷ்ணன் அவர்களிடமிருந்து நாங்கள் கற்றறிந்த  ‘இயற்கை வாழ்வியல்’ முறைகளை, எங்களைப் போன்ற ஆரோக்கிய வாழ்க்கை வாழ்வது குறித்தத் தேடலில் இருக்கும் மற்ற அன்பர்களும், நண்பர்களும் எங்களுடன் வந்து சில நாட்கள் தங்கி, கற்றுக் கொள்வதற்கான தளமாகவும் இவ்வனத்தை அமைக்க உள்ளோம். அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் நிறைவுற்ற பின்னர் அது குறித்தத் தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். 

Wednesday, April 27, 2016

கம்பு தபோலி (சாலட்)

கம்பு தபோலி (சாலட்)
கம்பு தபோலி (சாலட்)

தேவையான பொருட்கள் (2 நபருக்கு):

  1. முழு கம்பு – 1 குவளை (200 கிராம்)
  2. பெரிய வெங்காயம் – 1 (நடுத்தர அளவு)
  3. தக்காளி – 1 (பெரியது)
  4. கொத்தமல்லி – 1 குவளை 
  5. புதினா – 1 அல்லது 2 தேக்கரண்டி 
  6. வெங்காயத்தாள் (Spring Onion) – 3 தேக்கரண்டி 
  7. மிளகு – 7 அல்லது 8 எண்ணிக்கை
  8. இந்துப்பு - சுவைக்கேற்ப


Tuesday, December 8, 2015

இயற்கை வாழ்வியலில் எங்கள் இரண்டரை வருட அனுபவங்கள்


நாங்கள் இயற்கை வாழ்வியல் முறையைப் பின்பற்ற ஆரம்பித்து இரண்டரை வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த இரண்டரை வருடங்களில் எங்களுடைய உடல் நலத்தில்  ஏற்பட்டுள்ள முன்னேற்றம், எங்களைச் சுற்றி இருப்பவர்களிடமிருந்து நாங்கள் வழக்கமாக எதிர்கொள்ளும் கேள்விகள், நாங்கள் சமுதாயத்தில் கவனித்த ஒரு சில விசயங்கள், அவை குறித்த எங்கள் எண்ண ஓட்டங்கள், ஆகியவை குறித்த ஒரு வலைப்பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என கடந்த சில மாதங்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். இத்தனை நாட்களும், இதை எதிலிருந்து ஆரம்பிப்பது என்ற குழப்பத்தில் இருந்தேன். நாங்கள் சமீபத்தில் தொலைக்காட்சியில், ஒரு மருத்துவர் குழு, மக்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியைக் கண்ட பிறகு, எங்கள் கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இது தான் சரியான நேரம் எனத் தோன்றியது.


மருத்துவர்களின் நோய் குறித்த அறியாமை:

அந்தக் கலந்துரையாடலின் போது (http://www.hotstar.com/1000072205 time: 38:00) ஒரு மருத்துவர், ‘முப்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு, இயற்கையாகவே வரக்கூடிய நோய்கள்’ என்று சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றைப் பட்டியலிட்டார்.  இதைக் கேட்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். சில வருடங்களுக்கு முன்பு வரை, இதே நவீன மருத்துவ உலகம், இத்தகைய நோய்களை எல்லாம் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது என்று வகைப்படுத்தி இருந்தது. பின்னர் அது ஐம்பது வயதாக மாறியது.  ஒரு சில வருடங்களுக்கு முன்பு, அது நாற்பதாகக் குறைந்தது. ஆனால், தற்சமயம் அதே மருத்துவர்கள், இந்த நோய்களை, முப்பது வயதானவர்களுக்கு, அதுவும் ‘இயற்கையாகவே வரக்கூடியது’ என்று கூறியதைப் பார்க்கும் பொழுது, மருத்துவர்களே, நோய்கள் குறித்த அறியாமையில் இருக்கிறார்கள் என்பது நன்றாக விளங்குகிறது. இந்நிலையில் இவர்களால் நோயாளிகளுக்கு எப்படி சரியான ஆலோசனைகளை அளிக்க முடியும்? ஒருவேளை இவற்றை நவீன மருத்துவத்தின் கூற்றுப்படி, நோய்களாகவே ஏற்றுக்கொண்டாலும், இத்தனை வருடங்களில் அவற்றை முற்றிலும் குணப்படுத்துவதற்கான மருந்துகள் கண்டுபிடித்திருக்கப்பட வேண்டும். ஆனால் உண்மையில் நடப்பதென்ன? நோயாளிகளின் வயதுவரம்பு குறைந்து கொண்டும், அவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டும் இருக்கிறது. 

Tuesday, November 3, 2015

காய்கறி அவியல்

காய்கறி அவியல்
காய்கறி அவியல்
தேவையான பொருட்கள் (2 பேருக்கு):

  1. 5 வகையான காய்கறிகள் – 300 கிராம்
  2. தேங்காய் – 4 முதல் 5 துண்டுகள் வரை
  3. சீரகம் – 3/4 தேக்கரண்டி
  4. பச்சை மிளகாய் – 1 அல்லது காரத்திற்கேற்ப
  5. தயிர் – 1/2 குவளை
  6. கடுகு, உளுத்தம் பருப்பு – 1/4 தேக்கரண்டி
  7. கறிவேப்பிலை – 1 ஈர்க்கு
  8. இந்துப்பு – சுவைக்கேற்ப


Friday, January 2, 2015

இயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்

இங்குள்ள கருத்துக்கள், 'இயற்கை மருத்துவச் செம்மல்' திரு. G.பாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் எழுதிய 'இயற்கை வாழ்வியலின் மகிமை' எனும் கையேட்டிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளது.

நோய் என்றால் என்ன?
மனிதனின் இயல்பு ஆரோக்கியம். அது தாழும் போது, அதை உயர்த்த நிகழும் உள்ளுறை ஆற்றலின் பணியே நோய்.
உடல் நலத்தைப் பேணுவதும் அது தாழும் போது, அதை உயர்த்துவதும் உள்ளுறைகின்ற உயிராற்றலே ஆகும். அவை வேறுபட்டவை அல்ல. இருநிலைகளும் ஒன்றே.
நமக்கு அவ்வப்போது உடல் நலம் குறையக் காரணம், நோயைப் பற்றிய நமது தவறான அறிவே தவிர, வேறெதுவுமில்லை. நம்மில் பெரும்பாலோர் உடல் நலத்தைப் பற்றி தவறாக அறிந்து உள்ளோம். அநேகர் அரைகுறையாக அறிந்திருக்கின்றோம். மெத்தப்படித்தவர் என்று சொல்லப்படுகின்றவர்களிடையேயும் உடல் நலம், நோய் என்பனவற்றைப் பற்றிய அறியாமை காணப்படுகிறது. இத்தகைய தெளிவில்லாத தவறான தேற்றங்கள் நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்தி உயர்ந்த உன்னதமான உடல் நலம் பெற்று வாழ வகையின்றி செய்கிறது.

மருத்துவம் மற்றும் மருத்துவரின் கடமை என்ன?
மருத்துவம் என்பது வருமுன் காப்பது. அதுவே இந்நாளில் எங்கும் பேசப்படும் உண்மை. மக்களின் நல் உடல் நலம் காத்து ஊதியம் பெறுவோரே மருத்துவராவர். நோய் வளரும் வரை காத்திருந்து அத்தோடு போராடி ஊதியம் பெறுபவர் அல்லர். 

இந்நாட்களில் மருத்துவ உலகில் நோயாளிகளுக்காகக் காத்திருந்து அவர்கள் தங்களிடம் வரும் போது சிகிச்சை என்ற பெயரில் நோயை அடக்கி உடல் நலமென்னும் மாயையைத் தோற்றுவித்து பணம் பெறுகின்றனர். இவ்வாறு, பணம் பண்ணுவது, நோய்ப் பண்ணையாக சமூகம் சீர்கேடான அவல நிலைக்கு போய்க்கொண்டு இருக்கிறது என்பதையே காட்டுகிறது. இந்நிலை மாறி மக்கள் நல்லுடல் நலத்தோடு வாழ வேண்டுமென்ற விழிப்புணர்வு தோன்ற வேண்டும். 

ஆரோக்கியமாக வாழ சிறந்த வழிமுறை என்ன?
இயற்கை வாழ்வியலில் கற்கும் பாடங்கள் நோய் மற்றும் உடல் நலத்தைப் பற்றிய தெளிவையும் விழிப்புணர்வையும் அளிக்கின்றன. இத்தகு தெளிவான அறிவு, உடல் நலம் தாழ்ந்தவர்கள் அதிலிருந்து மீண்டு எளிதில் உயரவும், உடல் நலத்தோடு இருப்பவர்கள் மேலும் தொடர்ந்து உன்னத உடல் நலத்தோடு வாழவும் வழி வகுக்கிறது.

மெய்ஞானத்தை அடியொற்றி இயங்கும் இயற்கை வாழ்வியல், மக்களின் உடல் நலத்தைப் பேணியே, மருத்துவர்கள் ஊதியம் பெற வேண்டுமென்ற உண்மையை ஆணித்தரமாக மக்களுக்கு உணர்த்துகிறது. 

இயற்கை வாழ்வியலானது, உடல் நல உயர்விற்கான மாறுபாடில்லா உண்டி, யோகாசனங்கள் மற்றும் உடற்பயிற்சி போன்ற உடல் நலத்தை இயல்பாக உயர்த்தும் நல் மார்க்கங்களை மக்களுக்குப் போதிக்கின்றது.
இயற்கை வாழ்வியல் துறையில் வல்லுநர்கள் மக்களின் உடல் நலத்தைப் பேணுவதற்காக ஊதியம் பெறுவோர். அங்ஙனம் மக்கள் உடல் நலத்தால் தாழ்ச்சியுறும் போது உடலுக்குப் பின் விளைவுகள் ஏதுமில்லா இயற்கையான வழியான உடல் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட உயர் வகையான எளிய நல் உபாயங்களைக் கையாண்டு உடல் நலத்தை உயர்த்தி ஊதியம் பெறுவோர்.

இயற்கை வாழ்வியலென்ற ஒரு துறையை செவ்வனே புரிந்து கொண்டு கடைபிடிக்கும் போது, அத்துறையே உடல் நல உயர்வுக்கான நற்பாதுகாவலனாக இயங்குகிறது.

இத்துறை மக்களிடையே 'உனக்கு நீயே மருத்துவர்' என்ற சீரிய விழிப்புணர்வைத் தூண்டி அவர்களை நல்வழிப்படுத்துகிறது. மக்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழவும், நோய் வாய்ப்பட்டால் செலவின்றி, மருந்தின்றி வீட்டிலேயே தனக்குத்தானே மருத்துவராகி சுகமடையும் வழியை அறிந்து கொள்ளலாம்.

குறள் கூறும் மருத்துவம்


இங்குள்ள கருத்துக்கள், 'இயற்கை மருத்துவச் செம்மல்' திரு. G.பாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் எழுதிய 'இயற்கை வாழ்வியலின் மகிமை' எனும் கையேட்டிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளது.

வெளியேறாமல் உடலில் தங்கி விட்ட கழிவு வண்டல்களே நோயின் அடிப்படைக் காரணமாகும். அங்ஙனம் வெளியேறாமல் தங்கிவிட்ட கழிவுப் பொருள்களை வெளியேற்றும் பணியைச் செய்யக்கூடியவாறு, உணவுப் பொருள்களை மருந்தாக உபயோகிக்க, இயற்கை வாழ்வியல் மக்களுக்குக் கற்றுத் தருகிறது.

இதுபற்றி வள்ளுவரும் மிகத்தெளிவாக சொல்லுகிறார்:
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது 
அற்றது போற்றி யுணிண்
இங்கு வள்ளுவர் அற்றது எனக் குறிப்படுவது வெளியேறாமல் உடலில் தங்கி விடுகின்ற கழிவு வண்டல்களைக் குறிக்கும். 

Tuesday, December 23, 2014

ஆரோக்கியத்தின் இலட்சணங்கள் – லூயி குயினே


Aug.F.Reinhold எழுதிய ‘Louis Kuhne’s Facial Diagnosis’ என்ற புத்தகத்தின் பக்கங்கள் 101-102 லிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
மூன்று எல்லை வரையறைக் கோடுகள்
மூன்று எல்லை வரையறைக் கோடுகள்


பசி உணர்வு:
இயற்கையான, எளிய மற்றும் சத்துக்கள் அடங்கிய உணவு வகைகளை விரும்பி உண்ணக் கூடிய வகையில் பசி உணர்வு ஏற்படுதல், உடலும் மனமும் நல்ல நிலையில் இருப்பதற்கான அறிகுறி. வயிறு முழுமையாக நிரம்பும் முன்னரே திருப்தி ஏற்பட வேண்டும். வயிறு நிரம்பியபடியான அல்லது அடைத்துக் கொண்டு இருக்கும்படியான சங்கடமான உணர்வு எழக்கூடாது. செரிமானம் அமைதியாகவும், நாம் உணர முடியாத வகையிலும் இருக்க வேண்டும்.

தாகம்: 
தாகம் ஏற்படும் போது, பழங்கள் அல்லது நீர் அருந்துவதற்கான விருப்பம் மட்டுமே எழ வேண்டும்.

சிறுநீர்:
சிறுநீர், தெளிவாகவும், பொன்னிற மஞ்சள் நிறத்திலும் இருக்க வேண்டும். அது இனிப்பு, புளிப்பு மற்றும் காரம் போன்ற வாசனை அற்றதாக இருக்க வேண்டும். ஆவியானவுடன், கட்டியாக மாறக்கூடாது. வெளியேறும் பொழுது, எந்த வலியும் இல்லாமல் எளிதாக இருக்க வேண்டும்.


Monday, September 8, 2014

இயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்

மூலம்: Organic Farmers Market

1. இரசாயனங்களை நம் உடலிலிருந்து விலக்க வேண்டும்: 
விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள், நச்சுக்கள் அடங்கிய இரசாயனங்களால் ஆனது. இத்தகைய நச்சுக்கள் விளைபொருட்களிலும் தங்கி விடுகின்றன. நாம் உண்ணும் பெரும்பாலான உணவு வகைகள் நச்சுத்தன்மை கொண்டுள்ளன. இவை உணவுப் பொருட்களைக் கழுவுவதின் மூலம் நீங்குவதில்லை. மாறாக அவை மிகக் கடுமையான உடல்நலக் குறைபாடுகளை ஏற்படுத்துகின்றன. பல்வேறு ஆய்வறிக்கைகள், பூச்சிக்கொல்லிகளினால் ஏற்படும் ஆபத்துக்களாக, புற்றுநோய், நரம்பு மண்டலம் மற்றும் நாளமில்லா சுரப்பிகளின் பாதிப்பு, மலட்டுத்தன்மை, போன்றவற்றை சுட்டிக்காட்டுகின்றன. 

2. வருங்காலத் தலைமுறையினரைப் பாதுகாக்க வேண்டும்:
பூச்சிக்கொல்லியின் நச்சுத்தன்மையானது, ஒரு தாய் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டத் துவங்குதற்கு முன்னரே, பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு அபாயத்தைக் கொண்டுள்ளது. குழந்தைத் தன் தாயின் கருவில் இருக்கும்போதே, நூற்றுக்கணக்கான இரசாயனங்களின் பாதிப்புகளுக்கு உள்ளாகிறது என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் உணவானது, எந்த விதமான நச்சுக்களும், இரசாயனங்களும் இல்லாதிருக்கின்றது. எனவே அவை வளர்ந்த மனிதர்களைக் காட்டிலும், மிகக் குறைவான எடை கொண்ட குழந்தைகளின் உடல் உறுப்புகள் மற்றும் மூளையின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமாகிறது.

3. ஹார்மோன், நோய் எதிர்ப்பு ஊசிகள் மற்றும் மருந்துகளை கால்நடைகளுக்குப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: 
கறவை மாடுகள் மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படும் விலங்குகளுக்கு, வளர்ச்சியை அதிகரிப்பதற்காகத் தொடர்ந்து ஹார்மோன் மற்றும் நோய் எதிர்ப்பு ஆற்றல் தரும் ஊசிகள் போடப்படுகிறது. இந்த மருந்துகளின் தாக்கம் பாலிலும், இறைச்சியிலும் கலந்து, உடல்நலக் குறைபாடுகளை ஏற்படுத்துகிறது.


Tuesday, December 10, 2013

திணை வெண்பொங்கல்

திணை வெண்பொங்கல்

தேவையானப் பொருட்கள்: (2 நபருக்கு)
  1. திணை அரிசி - 1 குவளை (150 கிராம்)
  2. நீர் – 3 1/2 குவளை
  3. முளை விட்ட பாசிப்பயறு – 1/3 குவளை
  4. சீரகம் – 1/2 தேக்கரண்டி
  5. மிளகு – 1/4 தேக்கரண்டி
  6. பெரிய வெங்காயம் – 1 நீளமாக நறுக்கியது (விருப்பப்பட்டால் மட்டும் சேர்க்கவும்)
  7. முழு பச்சை மிளகாய் – 1
  8. இந்துப்பு – 1/2 தேக்கரண்டி
  9. பொடிதாக நறுக்கிய இஞ்சி – 1/4 தேக்கரண்டி
  10. மஞ்சள் தூள் - சிறிதளவு
  11. கறிவேப்பிலை – விருப்பமான அளவு

Friday, November 29, 2013

இயற்கை வாழ்வியல் என்றால் என்ன?




இங்குள்ள கருத்துக்கள், 'இயற்கை மருத்துவச் செம்மல்' திரு. G.பாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் எழுதிய 'இயற்கை வாழ்வியலின் மகிமை' எனும் கையேட்டிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளது.

இயற்கை வாழ்வியல் என்றால் என்ன?

இயற்கை வாழ்வியல் அல்லது இயற்கை மருத்துவம் என்ற துறை மிக மேன்மையான ஒன்று. காரணம் அத்துறை மெய் ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட விஞ்ஞானம். உடலியக்கத்தையும், உயிரோட்டத்தின் மாறுபாடில்லா தன்மையையும் ஆதாரமாகக் கொண்டு செய்யப்படுகின்ற ஒரு மருத்துவம்.

Wednesday, October 30, 2013

சாத்வீக இட்லி

சாத்வீக இட்லி
சாத்வீக இட்லி

தேவையான பொருட்கள் - 12 முதல் 15 இட்லி தயாரிக்க

மாவு தயாரிப்பதற்கு:

  • புழுங்கல் அரிசி – 1 குவளை / 200 கிராம் (கைக்குத்தல் கிடைத்தால் நல்லது)
  • பச்சரிசி – 1/2 குவளை / 100 கிராம்
  • வெண்பூசணி – 2 குவளை / 200 கிராம்

மாவுடன் கலப்பதற்கு:

  • முளைவிட்ட பாசிப்பயறு அல்லது நிலக்கடலை – 3 தேக்கரண்டி
  • கேரட் துருவல் – 3 தேக்கரண்டி
  • முட்டைக்கோஸ் நறுக்கியது - 3 தேக்கரண்டி
  • இந்துப்பு – 1/2 தேக்கரண்டி


Monday, October 28, 2013

இயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்

இயற்கை வாழ்வியலில் கடைபிடிக்கப்படும் உணவு முறைகளை வாசிக்கும் முன்னர், தயவு செய்து முன்னுரை மற்றும் இயற்கை வாழ்வியல் என்றால் என்ன? ஆகிய இரண்டு பதிவுகளையும் படித்து விட்டு இந்தக் கட்டுரையைத் தொடரவும். ஏனெனில் இயற்கை வாழ்வியலின் அடிப்படைக் கருத்துக்களை புரிந்து கொள்ளாமல், வெறும் உணவு முறைகளை மட்டும் வாசித்து விட்டு, அதை பின்பற்ற முயற்சித்தால், அடுத்த சில நாட்களில் உங்களுக்கு பலவிதமான மனக்குழப்பங்கள் ஏற்படலாம். ஏன், எதற்கு என்கின்ற காரணத்தை தெரிந்து கொண்டால் மட்டுமே, இந்த வாழ்வியலை சந்தேகமின்றி கடைபிடிக்க முடியும்.

இங்கு தரப்பட்டுள்ள உணவு முறைகள் பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் அனைவராலும் கடைபிடிக்கக் கூடியவை. 

Saturday, October 26, 2013

பசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்?

பாலைத் தவிர்க்க வேண்டியதற்கான சில முக்கிய காரணங்கள்:
  1. உலகில் உள்ள எந்த பாலூட்டி வகை உயிரினமும் பல் முளைக்கும் வரை / தானாக மற்ற உணவுகளை உண்ணும் வரை மட்டுமே தாய்ப்பால் அருந்துகிறது (கன்றுக்குட்டி உட்பட). இயற்கையில் மனிதர்களும் இந்த பொதுவான விதிமுறைக்கு உட்பட்டவர்கள். ஆனால் விதிவிலக்காக மனிதர்கள் மட்டும் வாழ்நாள் முழுவதும் பசுவின் பாலை அருந்திக் கொண்டிருக்கிறோம்.
  2. எந்த வகைப் பாலூட்டிகளிலும், தாய்ப்பாலானது, அதனுடைய குட்டியின் வளர்ச்சி, நோய் எதிர்ப்பு ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்து தேவைகளை முன்னிறுத்தி, இயற்கை அளித்தக் கொடையாகும். பசுவின் பால், அதன் கன்று இரண்டு வருடங்களில் வளர்ந்து, அது ஒரு கன்றை ஈனும் அளவிற்கு முதிர்ச்சி அளிக்கக் கூடியது. மாட்டிற்கு விரைவான உடல் கட்டுமானம் அடிப்படையானது. ஆனால் மனிதர்கள் விரைவான மூளை வளர்ச்சியையும் மெதுவான உடல் வளர்ச்சியையும் கொண்டவர்கள். இந்நிலையில் பசுவின் பால், மனிதர்களின் இயற்கையான வளர்ச்சிக்கு உகந்ததல்ல.

சாத்வீக சாம்பார்

சாம்பார் செய்யும் போது துவரம் பருப்பு குறைவாகவும், காய்கறிகள் அதிகமாகவும் இருக்க வேண்டும். கீழ்க்கண்ட காய்கறிகளில் ஏதாவது 2 முதல் 4 வகையான காயை, சாம்பார் செய்ய பயன்படுத்தவும்.
  • முள்ளங்கி
  • வெண்பூசணி
  • சௌசௌ
  • கத்தரிக்காய்
  • பரங்கிக்காய்
  • கேரட்
  • அவரை
  • உருளைக்கிழங்கு

கீரைக்கூட்டு

தேவையானப் பொருட்கள்: (இரண்டு நபருக்கு)
  • ஏதாவது ஒரு வகை கீரை (நறுக்கியது) – 2 குவளை
  • முளை விட்ட பாசிப்பயறு – 30 கிராம்
  • சீரகம் – 1/2 தேக்கரண்டி
  • சிறு வெங்காயம் – 5 முதல் 10 துண்டுகள்
  • வெள்ளைப்பூண்டு – 1 அல்லது 2 துண்டுகள்
  • பச்சை மிளகாய் – 1
  • இந்துப்பு – சிறிதளவு
  • தேங்காய் துருவல் மற்றும் கொத்தமல்லி தழை – சிறிதளவு (விருப்பப்பட்டால் மட்டும்)