தேவையானப்
பொருட்கள்: (2 நபருக்கு)
- திணை அரிசி - 1 குவளை (150 கிராம்)
 - நீர் – 3 1/2 குவளை
 - முளை விட்ட பாசிப்பயறு – 1/3 குவளை
 - சீரகம் – 1/2 தேக்கரண்டி
 - மிளகு – 1/4 தேக்கரண்டி
 - பெரிய வெங்காயம் – 1 நீளமாக நறுக்கியது (விருப்பப்பட்டால் மட்டும் சேர்க்கவும்)
 - முழு பச்சை மிளகாய் – 1
 - இந்துப்பு – 1/2 தேக்கரண்டி
 - பொடிதாக நறுக்கிய இஞ்சி – 1/4 தேக்கரண்டி
 - மஞ்சள் தூள் - சிறிதளவு
 - கறிவேப்பிலை – விருப்பமான அளவு
 
செய்முறை:
திணை
அரிசியை சமைப்பதற்கு முன்னர் 20 முதல் 30 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். பின் நீரில்
ஒரு முறை கழுவி, அரிசியைக் களைந்து வைத்துக் கொள்ளவும். குக்கரில் அரிசியைப் போட்டு,
அதனுடன் மேலேக் குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு, 3 1/2 குவளை நீர் ஊற்றி
மூடிவைக்கவும். ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து 8 நிமிடம் வரை வைத்திருக்கவும்.
ஆவி போனபிறகு 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து சாதத்தை கிளறி விடவும். சூடு சற்று
குறைந்ததும் சாப்பிடலாம்.
குறிப்பு:
- குக்கருக்கு பதில் வழக்கமாக சாதம் சமைக்கும் பாத்திரம் அல்லது மண் பாத்திரம் பயன்படுத்தலாம். எந்த பாத்திரத்தில் சமைத்தாலும், சாதம் முழுமையாக வெந்த பிறகு பாத்திரத்தை மூடி விட்டு, 10 நிமிடம் கழித்து திறப்பது நல்லது.
 - பொங்கல் நன்கு குழைவாக இருக்க விரும்பினால், தண்ணீர் சற்று கூடுதலாக சேர்த்துக் கொள்ளவும்.
 - வெண் பொங்கல் செய்ய வரகு மற்றும் சாமை அரிசிகளையும் பயன்படுத்தலாம்.
 - இது சாத்வீக முறைப்படி சமைக்கப்பட்டிருப்பதால், எண்ணை / நெய் /வனஸ்பதி சேர்க்கப்படவில்லை. முந்திரிப்பருப்பு சேர்க்க விரும்பினால், வெறும் வாணலியில் வறுத்து பொங்கலுடன் கலந்து கொள்ளவும்.
 
இதே செய்முறையில் சீரக சம்பா வெண்பொங்கல்:


No comments :
Post a Comment